சமையல் குறிப்புகள்
மரவள்ளிக்கிழங்கு சாண்ட்விச் தோசை
தேவையான பொருட்கள்
- மரவள்ளிக்கிழங்கு – ஒரு கப்
- ரவை – ஒரு கப்
- அரிசி – மாவு ஒரு
- வெங்காயம் – 1
- தக்காளி – 1
- உருளைக்கிழங்கு – 1
- பச்சை மிளகாய் – 2
- சாட் மசாலா – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- கொத்தமல்லி பேஸ்ட் – 2டீஸ்பூன்
செய்முறை
- மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து துருவிக்கொள்ளவும்.
- உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொண்டு வட்ட வடிவமாக நறுக்கி கொள்ள வேண்டும்.
- ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- வெங்காயம், தக்காளியை வட்டவடிவமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் ரவை, உப்பு சேர்த்து மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- அந்த மாவில் துருவிய மரவள்ளிக்கிழங்கை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- அடுப்பில் தவாவை வைத்து இந்த மாவை இரண்டு தோசைகளாக சுட்டு எடுக்க வேண்டும்.
- ஒரு தட்டில் தோசை வைத்து அதன் மேல் முதலில் வட்டவடிவமாக வெட்டிய தக்காளி, அடுத்து வெங்காயம், அடுத்து உருளைக்கிழங்கு அடுத்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சாட் மசாலா, சிறிதளவு உப்பு, என்று ஒன்றன் பின் ஒன்றாக லேயராக அடுக்கி அதன் முடிவில் மற்றொரு தோசையில் கொத்தமல்லி பேஸ்டை தடவி மூடி துண்டுகளாக வெட்டி சூடாக பரிமாறவும்.
- இப்போது சூப்பரான மரவள்ளிக்கிழங்கு சாண்ட்விச் தோசை தயார்.