சமையல் குறிப்புகள்

மரவள்ளிக்கிழங்கு முறுக்கு

தேவையான பொருட்கள் :

 • மரவள்ளிக்கிழங்கு – அரை கிலோ
 • பச்சரிசி மாவு – முக்கால் கிலோ
 • இஞ்சி – ஒரு துண்டு
 • பச்சை மிளகாய் – 10
 • ஓமம் – 2 டீஸ்பூன்
 • உப்பு – தேவைக்கேற்ப
 • எண்ணெய் – தேவைக்கேற்ப
 • வெண்ணெய் – 100 கிராம்

செய்முறை :

 • இஞ்சி, பச்சை மிளகாய், ஓமத்தை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
 • மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் துருவிய மரவள்ளிக்கிழங்கை போட்டு அதனுடன் அரிசி மாவு, அரைத்த விழுது, உப்பு, வெண்ணெய் சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும்.
 • வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவை முறுக்கு அச்சில் போட்டு சிறு சிறு முறுக்குகளாகப் பிழிந்து பொரித்தெடுக்கவும்.
 • இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தரலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker