சமையல் குறிப்புகள்
ஆரோக்கியம் காக்கும் ஆப்பிள் செலரி ஜூஸ்
தேவையான பொருட்கள் :
- செலரி – 2
- ஆப்பிள் – 1
- இஞ்சி – சிறிய துண்டு
- பார்ஸ்லே – அரை இன்ச்
- லெமன் ஜூஸ் – அரைடீஸ்பூன்
செய்முறை:
- செலரி, ஆப்பிளை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
- இஞ்சி தோல் நீக்கி கொள்ளவும்.
- நறுக்கிய செலரி, ஆப்பிள், இஞ்சி, பார்ஸ்லே, லெமன் ஜூஸ் அனைத்தையும் ஜூஸரில் அரைத்து எடுத்து டம்ளரில் ஊற்றி பருகவும்.
- ஆரோக்கியம் காக்கும் ஆப்பிள்-செலரி ஜூஸ் ரெடி.