ஆரோக்கியம்

வராண்டாக்களில் உடற்பயிற்சி: நடைபயிற்சி தளமாகும் வீட்டு மொட்டை மாடிகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். ஊரடங்கு உத்தரவால் காலை, மாலை என தினமும் நடைபயிற்சி செல்கிறவர்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். போலீசாரின் கெடுபிடி காரணமாக வெளியே செல்லவே அச்சப்படுகிறார்கள். இதனால் என்ன செய்வது? என்று தெரியாமலேயே இருந்தனர்.



இந்தநிலையில் தங்கள் வீட்டு மொட்டை மாடிகளிலேயே நடைபயிற்சியை மேற்கொள்ள மக்கள் பழகிவிட்டார்கள். தினமும் காலை, மாலை வேளைகளில் ஒவ்வொரு வீட்டின் மொட்டை மாடிகளிலும் மக்கள் உற்சாக நடைபோடுவதை பார்க்க முடிகிறது. சிறிய இடம்தான் என்றாலும் வேக நடை நடந்து தங்களது கலோரிகளை குறைப்பதில் மக்கள் குறியாக உள்ளனர்.

அதேபோல வீட்டின் வராண்டாக்கள், நடைபாதைகளில் சிறிய சிறிய உடற்பயிற்சிகளையும் மக்கள் மேற்கொள்வதை பார்க்க முடிகிறது. குறிப்பாக முதியோரும், பெண்களும் உற்சாகமாக இந்த உடற்பயிற்சி, நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வப்போது நடைபயிற்சிக்காக சாலையில் சுற்றும் சிலரையும், ‘ப்ளஸ்… வீடுகளிலேயே நடைபயிற்சி செல்லுங்கள். அரசின் உத்தரவுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்’ என்று போலீசார் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைப்பதையும் பார்க்க முடிகிறது.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker