தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

ஏ.சி ரூமில் குழந்தையை படுக்க வைக்கும் போது கவனம் தேவை

குழந்தைகளை ஏ.சி. அல்லது ஏர்கூலர் உள்ள அறையில் தூங்கவைக்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

குழந்தைகளை ஏ.சி. அல்லது ஏர்கூலர் உள்ள அறையில் தூங்கவைக்கும்போது, பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

* ஏ.சி. காற்று குழந்தைகளின் முகத்தில் நேரடியாகப் படுவதுபோல, படுக்க வைக்காதீர்கள். ஏ.சி. காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், குழந்தைகள் மூச்சுவிடக் கஷ்டப்படுவார்கள். பக்கத்தில் படுத்துக்கொண்டிருக்கும் நாமும் தூங்கிவிடுவதால், பிள்ளைகள் மூச்சுவிடச் சிரமப்படுவது தெரியாமலே போய்விடலாம்.

* ஏ.சி.யில் இருக்கும் பில்டரில் சேரும் தூசியை வாரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால், அதில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத தூசிகள், குழந்தைகளின் மூச்சுக்குழாய்க்குள் சென்றுவிடும். இந்தத் தூசியை வெளியேற்றுவதற்காக, நுரையீரலானது சளியை அதிகமாக உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

* குழந்தைகளுக்கு உடல் டெம்பரேச்சர் மாறுவது பற்றிச் சொல்லத் தெரியாது. எனவே, சூடான டெம்பரச்சரிலிருந்து சட்டென ஏசி அறைக்குள் அழைத்துச் செல்லாதீர்கள். அல்லது, அறைக்குள் நுழைந்ததுமே 16, 17 எனக் குறைந்த டெம்பரேச்சரில் ஏ.சி.யை வைக்காதீர்கள்.

* இரவில் காற்று அனலாக இருப்பதால், ஏ.சி. அறைக்குள் நுழைந்ததுமே சட்டை இல்லாமல் வெறும் உடம்புடன் தூங்க குழந்தைகள் ஆசைப்படுவார்கள். அதை அனுமதிக்காதீர்கள். கொஞ்சம் வளர்ந்த பிள்ளையாக இருந்தால், நெஞ்சுப் பகுதியையும், மூன்று வயதுக்குள்ளான குழந்தை என்றால், நெஞ்சுப் பகுதியோடு பாதத்தையும் துணியால் மறைத்துத் தூங்க வையுங்கள்.

* போர்வையால் தலையை முழுக்க மூடிக்கொண்டு தூங்கினால் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது. அதே கான்செப்ட்தான் ஏ.சி.க்கும்.  ஜோஸ்கதவு, ஜன்னல் எனச் சிறு வழியும் இல்லாமல், எல்லாவற்றையும் மூடிவிட்டுத்  தூங்கினால் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது. ஏ.சி.யின் மெக்கானிசம்படி வெளிக்காற்று உள்ளே வந்தாலும், வெளிக்காற்று உள்ளே வருகிறபடி, ஒரு சின்ன ஓப்பனிங் வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் குழந்தைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். இல்லையென்றால், நீங்கள் வெளிவிட்ட காற்றையே குழந்தையும் சுவாசிக்க நேரிடும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker