உறவுகள்டிரென்டிங்புதியவை

தமிழ் புத்தாண்டு: மங்கல பொருட்களை முதலில் பாருங்கள்

த்தாண்டு நிகழ்ச்சிக்காக பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களை முதன் முதலாக தரிசித்தால் இனிவரும் நாட்கள் முழுவதும் மகிழ்ச்சி நிரம்பியும் மங்கலப் பொருள்கள் செழித்தும் இருக்கும் என்பது நம்பிக்கை.

நாளை தமிழ் புத்தாண்டு: மங்கல பொருட்களை முதலில் பாருங்கள்
மங்கல பொருட்களை முதலில் பாருங்கள்
தென் தமிழகத்தை சார்ந்தவர்கள் விஷூக்கனி காணல் என்னுமொரு சம்பிரதாயத்தை பின்பற்றி வருகின்றனர்.

அதாவது, சித்திரை மாதம் பிறப்பதற்கு முந்தைய தினத்திற்கு முதல்நாள் இரவிலேயே, அதாவது இன்று (திங்கள் கிழமை) இரவு சாப்பாடு முடிந்தபிறகு பூஜை அறையை தூய்மை செய்து கோலமிட்டு வைத்து விடுவார்கள்.

வீட்டிலுள்ள பொன், வெள்ளி நகைகள், ஆபரணங்கள், பணம், நிலைக்கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பழங்கள், தேங் காய், மலர்கள் முதலிய மங்கலப் பொருள் களை தயாரித்து, ஒரு மனை யின் மீது கோலமிட்டு, பூஜைக் குரிய தெய்வத்தின் முன் வைப்பர். அரிசி, பருப்பு, வெல்லம், பலா, மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றையும் வைப்பர்.

மறுநாள் காலை அதாவது சித்திரை மாதப் பிறப்பான நாளை அதிகாலை முதன் முதலாக வீட்டிலேயே வயது முதிர்ந்த பெண் எழுந்து குளித்து புத்தாடை உடுத்தி கொள்வார். பின்பு அவர், பகவான் முன்பு குத்து விளக்குகளையும், ஊதுவத்திகளையும் ஏற்றி வைப்பார்.

அதற்கு பின்பு, அவர் வீட்டில் தூங்கும் ஒவ்வொருவரையும் தட்டி எழுப்பி, கண்களை மூடிய நிலையிலேயே சுவாமியின் முன்பு அழைத்துச் சென்று, கண்களை திறக்கச் சொல்வார்.

பூஜைக்குரிய தெய்வத்தையும், புத்தாண்டு நிகழ்ச்சிக்காக பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக தரிசிக்கும்படி செய்வார். இவ்வாறு செய்தால் இனிவரும் நாட்கள் முழுவதும் மகிழ்ச்சி நிரம்பியும் மங்கலப் பொருள்கள் செழித்தும் இருக்கும் என்பது நம்பிக்கை.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker