எடிட்டர் சாய்ஸ்

ஆண்களின் இந்த வகை ஹேர்ஸ்டைல் பெண்களுக்கு பிடிக்காதாம்

ஹேர்ஸ்டைல்- ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. முடி வெட்டும் கடைக்கு சென்றால் எனக்கு அந்த படத்தில் அந்த ஹீரோ/ ஹீரோயின் வைத்திருந்த அதே ஹேர்ஸ்டைல் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் இளைஞர்கள் பல. அப்படி என்னதான் இந்த ஹேர்ஸ்டைலில் உள்ளது என்று யோசித்தால், ஏராளமாக உள்ளது என்றே சொல்லலாம்.

ஒருவருக்கு பிடித்தமான ஹேர்ஸ்டைல் வைத்து கொண்டால் உளவியல் ரீதியாக பல நன்மைகள் கிடைக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. அதுவும் இப்போதெல்லாம் பெண்களை காட்டிலும் ஆண்கள் தான் வித்தியாச வித்தியாசமான ஹேர்ஸ்டைல்களை வைக்க அதிகம் விரும்புகின்றனர். ஆனால், இதில் ஒரு சிக்கலும் உள்ளது. நீங்கள் வைக்கின்ற சில மோசமான ஹேர்ஸ்டைல்களை பெண்கள் அதிகமாக வெறுக்கின்றனராம். வாங்க, அவை என்னென்ன வகை ஹேர்ஸ்டைல்கள் என்பதை பார்ப்போம்.



இப்படியெல்லாமா பண்ணுவாங்க..!
ஒரு சில ஆண்களுக்கு இந்த வகை ஹேர்ஸ்டைல் மிகவும் பிடிக்கும் போல. தலையின் நடு பகுதியை மட்டும் விட்டுவிட்டு மற்ற இடத்தில் உள்ள முடியை எல்லாம் ட்ரிம் செய்து விடுவர். இந்த வகை ஹேர்ஸ்டைல் பெண்களுக்கு பிடிக்காதாம்.

நோ..நோ..!
பெண்கள் முடியை கட்டாமல் லூஸ் ஹேர் விட்டிருந்தால் ஆண்களுக்கு அதிகம் பிடிக்கும். ஆனால், ஆண்கள் இது போன்று வைத்திருந்தால் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்கவே பிடிக்காதாம்.

இவ்ளோ ஸ்ட்ரிக்ட் வேண்டாமே..!
ஹேர்ஸ்டைல் வைக்கின்ற பெயரில் இது போன்ற கொடுமைகளும் நடப்பதுண்டு. மிகவும் கடுமையாக நடந்து கொள்ள கூடிய தலைவர்களின் ஹேர்ஸ்டைலை பல ஆண்கள் வைத்து கொள்வார்கள். இந்த வகை ஹேர்ஸ்டைலால் கூட உங்களுக்கு காதல் செட்டாகாமல் இருக்கலாம் போல.



கிரில் மண்டை..!
ஹேர்ஸ்டைல் வைக்கின்ற பெயரில் சில மோசமான செயல்களும் நடக்கும். அதில் இதுவும் ஒன்று. இது போன்று கிரில் ஹேர்ஸ்டைல் வைக்கும் ஆண்களை பெண்கள் கண்டு கொள்வது கூட இல்லையாம்.

வரி.. வரியாய்..!
பலவித பின்னல்களை கொண்டு ஹேர்ஸ்டைல் வடிவமைத்தால் அது பார்ப்பதற்கு வித்தியாசமாக தான் இருக்கும். ஆனால், இது பெண்களுக்கு பிடிப்பதில்லை என ஆய்வுகள் சொல்கின்றன. மேலும், விளையாட்டு வீரர்கள் இது போன்று வைத்திருந்தால் கூட பிடிப்பதில்லையாம்.

ஏன்மா..! ஏன் இப்படி..?
ஒரு சில ஆண்கள் குழந்தைகளுக்கு வைக்க கூடிய பாப்காட் போன்ற ஹேர்ஸ்டைல் வைத்திருப்பார்கள். இது பெண்களுக்கு சிரிப்பை உண்டாக்க கூடிய ஒன்றாக தான் இருக்குமாம். மேலும், இது பார்ப்பதற்கும் அவ்வளவு நன்றாக இருப்பதில்லை.



எப்போதும் எண்ணெய் ஒழுகளா..?
தலையில் எப்போதும் ஜெல்லை தடவி கொண்டு எண்ணெய் வடிவது போன்ற ஹேர்ஸ்டைல் வைத்திருந்தால் அது பலருக்கும் பிடிப்பதில்லையாம். மேலும், இது பார்க்க பொலிவான தோற்றத்தையும் தருவதில்லையாம்.

மிலிட்டரி கட்
மிலிட்டரி கட் ஹேர்ஸ்டைல் வைத்திருந்தால் மிகவும் கோபக்காரர்கள் போன்ற தோற்றத்தை பெண்களுக்கு தருகிறதாம். எனவே, இவை உங்கள் மீது பயத்தை உண்டாக்குமே தவிர விருப்பத்தை உண்டாக்காது.

கொடூரம் ஏன்..?
சிலர் பிறரை பயமுறுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் வைக்க கூடிய இது போன்ற ஹேர்ஸ்டைல் யாருக்காக இருந்தாலும் வெறுப்பை தான் உண்டாக்கும். ஆதலால் இந்த வகை ஹேர்ஸ்டைலை தவிர்த்து விடுங்கள்.

இப்படியுமா..?
சிலருக்கு இருக்க கூடிய கிரியேட்டிவிட்டி அனைத்தையும் இதில் தான் காட்டி இருப்பார்கள். அனால், இது மிக பெரிய தாக்கத்தை தான் பலருக்கும் ஏற்படுத்தும். பெண்களுக்கு இது போன்ற ஹேர்ஸ்டைல்கள் பிடிப்பதில்லை என ஆய்வுகள் கூறுகின்றன.

என்னப்பா இது..?!
சிலர் ஸ்பைக் ஹேர்ஸ்டைல் வைக்கின்ற பெயரில் முள்ளம்பன்றிக்கு இருப்பது ஹேர்ஸ்டைலை வைத்து கொள்வர். இது பல பெண்களுக்கு பிடிப்பதில்லையாம். அத்துடன் இதை வினோதமாக தான் பார்க்கவும் செய்வார்கள்.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker