உறவுகள்

உங்களுக்கு தெரியுமா வீட்டில் இருக்கும்போது உறவு வைத்துகொள்பவர்களுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்கள்

திருமணமான தம்பதிகளின் உறவு என்பது இரு தனி நபர்களை உடலளவில் மட்டும் இணைக்கும் விஷயம் மட்டுமல்ல, உடலை தாண்டி மனதையும் இணைக்கும் விஷயமாகும். மனிதர்களை பொருத்தவரை உறவு என்பது இன்பம் பயக்கும் விஷயமாக இருக்கலாம். ஆனால் அது இரு உள்ளங்களை இணைக்கும் விஷயம் என்பது உன்மை. இதுவரை நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளின் முடிவின் படி ஒரு ஆண் நாள் ஒன்றுக்கு 8000 முறை (அ) 7 நிமிடங்களுக்கு ஒரு முறை உறவு பற்றி நினைக்கின்றார் என கூறப்படுகிறது. அதே வேளையில் பெண் ஒருத்தி 18 நிமிடங்களுக்கு ஒரு முறை உறவை பற்றி நினைத்து பார்கின்றாள் என மற்றொரு ஆய்வு கூறுகிறது. மனித உணர்வுகளை மையப்படுத்திய இந்த விஷயத்திற்கு எண்களால் கட்டுப்பாடு விதிப்பது என்பது இயலாத காரியம்.

மேலும் சொல்லப்போனால் மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு கட்டத்திற்கு பின்னர் ஒவ்வொரு நாளும் உடல் உறவு பற்றி நினைத்து பார்க்கத் தான் செய்கின்றனர். இந்த உறவு கொள்வதால் மனித உடம்பில் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா? ஸ்பேனிஷ் ஆய்வாளர்களின் ஆய்வின் படி உறவு கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பற்றி இங்கே பார்ப்போம். தினசரி உறவில் ஈடுபடுவதன் மூலம், இரத்தமானது இரத்த நாளங்களில் சீராக உந்தப்படுவதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.தினமும் உறவு கொண்டால், மாதவிடாய் காலத்தில் வயிற்றுப்பிடிப்பு ஏற்படாமல் இருக்கும். குறிப்பிட்ட கால இடைவெளியில் உறவு வைத்துக்கொள்ளுதல் மூலம் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. ஒரு மனிதர் இயல்பான உறவு (வாரம் இரண்டு முறை) உடலுறவு வைத்துக்கொண்டால் இதய நோய்களுக்கான அறிகுறிகள் குறையும். உடல் உறவிற்கும் ரத்த அழுத்தத்திற்கு ஒரு தொடர்பு உண்டு., முறையான உறவு சீரான ரத்த அழுத்தத்தினை பராமரிக்கும் என சொல்லப்படுகிறது.அதிலும் தலைவலி, உடல்வலி போன்ற சிறிய வலிகளுக்கும் உறவு ஒரு சிறு நிவாரணம் அளிக்கும் எனவும் கூறப்படுகிறது. முறையான உடல் உறவு உடற்பயிற்ச்சி சமானம் என கூறப்படுகிறது. உடலின் ரத்த அழுத்தம், கலோரிஸ், சதைகளை பலப்படுத்தல் போன்ற மாற்றங்களை ஏற்படுத்தும் உடலுறவு என்பது ஒரு உடற்பயிற்சியாகவே கருதப்படுகிறது. உறவு கொள்வதால் அங்கத்தில் ஏற்படும் அமைதி மூலைக்கான சீரான ஓய்வினை அளிக்கின்றது, எனவே நினைவாற்றல் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. தொடர்ச்சியான உறவு கொள்ளும் ஆண்களுக்கு ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படாது என கூறப்படுகிறது. இந்த உறவின் உச்சத்தை அடைந்த நிலையில் ஏற்படும் பரிமாற்றம், ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும் .Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker