சமையல் குறிப்புகள்

சூப்பரான மோர் ரசம்

தேவையான பொருட்கள் :

 • புளித்த தயிர் – அரை கப்
 • தண்ணீர் – 2 கப்
 • உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

 • கடுகு – 1 டீஸ்பூன்
 • சீரகம் – அரை டீஸ்பூன்
 • காய்ந்த மிளகாய் – 1
 • கறிவேப்பிலை – ஒரு ஈர்க்கு
 • பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
 • எண்ணெய் – 2 டீஸ்பூன்
அரைக்க :

 • வறுக்காத‌ வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்
 • சின்ன வெங்காயம் (உரித்தது) – 2
 • பூண்டு – 2 பல்
 • காய்ந்த மிளகாய் – 3
 • தேங்காய்த்துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
 • மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

செய்முறை:

 • தயிரைக் கடைந்து வைத்துக் கொள்ளுங்கள்.
 • அரைக்க வேண்டிய பொருள்களை தேவையான அளவு தண்ணீர் விட்டு, பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.
 • இதைத் தயிரில் கலந்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கடைந்து கொள்ளுங்கள்.
 • இந்த மோர் ரசம், திக்கான சாம்பார் போல இருக்க வேண்டும். அதற்கேற்ப தயிரில் தண்ணீரை ஊற்றுங்கள்.
 • அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றித் தாளிக்க வேண்டியதைப் போட்டு தாளித்து தயிரில் சேருங்கள்.
 • நீங்கள் சாப்பிடுவதற்கு 1 மணி நேரம் முன்பு இதைச் செய்து வைத்தால், தாளித்தவை எல்லாம் இறங்கி ரசம் சாப்பிட அமிர்தமாக இருக்கும்.
 • சாதம் உருளைக்கிழங்குடன் சேர்த்துச் சாப்பிட பிரமாதமாக இருக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker