அழகு..அழகு..

அழகு தரும் ‘சன் கிளாஸ்’

சன்கிளாஸ், அழகிய தோற்றத்தை தருவதோடு கண்களை பாதுகாக்கவும் உதவுகிறது. கம்பீரமான, ஸ்டைலான தோற்றத்திற்காக நிறைய பேர் சன்கிளாஸ்களை விரும்பி அணிகிறார்கள். அவர்களின் ரசனைக்கேற்ப விதவிதமான வடிவத்தில், கண்கவர் பிரேம்களில் சன்கிளாஸ்கள் காட்சி அளிக்கின்றன. முக அமைப்பிற்கு பொருத்தமான சன்கிளாஸை தேர்ந்தெடுப்பதுதான் அழகிய தோற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். அதுபற்றி பார்ப்போம்.



பூனைக்கண் நிற சன் கிளாஸ்களின் வெளிப்புற விளிம்பு பகுதி கூம்பு வடிவத்தில் காணப்படும். அதற்கேற்ப பிரேம்களும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த வகை சன்கிளாஸ்கள் இதய வடிவ முக அமைப்பை கொண்டவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். பிரேமின் நிறமும் சரும நிறத்திற்கு பொருத்தமாக இருக்குமாறு பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஏவியேட்டர் சன்கிளாஸ் ஆண், பெண் இருபாலருக்கும் அனைத்து வகையான முக அமைப்பிற்கும் ஏற்றதாக அமைந்திருக்கும். ஆனால் சன்கிளாஸின் அளவை தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்தவகை சன்கிளாஸ்களின் பிரேம் அளவு பொருத்தமாக இல்லாவிட்டால் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. தாமிர நிறம் மற்றும் தங்க நிறம் கொண்ட பிரேம்கள் பெண்களுக்கு கூடுதல் அழகை கொடுக்கும். எல்லா சரும நிற பெண்களுக்கும் இது பொருத்தமாக இருக்கும்.



வட்ட வடிவம்கொண்ட சன்கிளாஸ்கள் முக்கோண முகம் கொண்ட பெண்களுக்கு நேர்த்தியாக இருக்கும். இதயவடிவ முக அமைப்பை கொண்டவர்களும் வட்ட வடிவ சன்கிளாஸ் அணியலாம். அதேவேளையில் வட்டமான முக அமைப்பை கொண்ட பெண்கள் வட்டவடிவ சன்கிளாஸ் அணிவதை தவிர்க்க வேண்டும். முகமும், பிரேமும் வட்டமாக இருந்தால் பார்க்க அழகாக இருக்காது.

வட்ட வடிவ முக அமைப்பை கொண்டவர்கள் நீளமான அல்லது முக்கோண வடிவ பிரேம்களை அணிவது நல்லது. அவர்கள் சதுர வடிவ பிரேம் கொண்ட சன்கிளாஸையும் அணியலாம். சாக்லேட் நிற பிரேம்களையும் தேர்ந்தெடுக்கலாம். வெள்ளை, கருப்பு, மெட்டாலிக் உலோக பூச்சு கொண்ட பிரேம்களும் அவர்களுக்கு அழகு தரும். கடற்கரை போன்ற இடங்களுக்கு செல்லும்போது வெள்ளை நிறம் கொண்ட சன்கிளாஸை அணிவது சிறப்பு.

‘வேபெரர்’ வகை சன்கிளாஸ்கள் ஏவியேட்டர் போலவே அனைத்துவகையான முக அமைப்பை கொண்டவர்களும் அணியும் விதத்தில் அமைந்திருக்கும்.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker