சமையல் குறிப்புகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இஞ்சி- மஞ்சள் ஜூஸ்

தேவையான பொருட்கள்

  • இஞ்சி – 100 கிராம்
  • மஞ்சள் – தேவைக்கு
  • எலுமிச்சை பழம் – 2
  • மிளகு தூள் – கால் டீஸ்பூன்
செய்முறை

  • இஞ்சி மற்றும் மஞ்சளை நன்றாக கழுவிக்கொள்ளவும்.
  • பின்னர் இரண்டையும் தனித்தனியாக மிக்சியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
  • எலுமிச்சை பழத்தையும் சாறு பிழிந்து கொள்ளவும்.
  • பின்னர் இஞ்சி, மஞ்சள் விழுதை எலுமிச்சை பழ சாறுடன் கலக்கவும்.
  • அதனுடன் மிளகு தூளை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
  • காலையில் வெறும் வயிற்றில் 60 முதல் 80 மில்லி லிட்டர் பருகலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker