ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தைப் போலவே பாலியல் ஆரோக்கியமும் ஏன் முக்கியம்? காரணம் என்ன?

நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் தொடர்பு உடையது பாலியல் ஆரோக்கியம். திருப்திகரமான பாலியல் வாழ்க்கைக்கு ஆரோக்கியமான மனம் மற்றும் உடல் மிகவும் அவசியம். அதே போல் வழக்கமான பாலியல் உறவு உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அவசியம்.

இன்றைய நாட்களில் நமது உடல் மீது அக்கறை செலுத்தக்கூடிய வகையில் என்ன உணவு உட்கொள்வது, என்ன உடற்பயிற்சி செய்வது என்பது போன்ற குறிப்புகள் அடங்கிய பதிவுகள் இணையதளத்தில் மற்றும் நாளேடுகளில் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் பாலியல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவது இதைவிட முக்கியம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

உங்கள் பாலியல் செயல்திறனைத் தொடர நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள்:

உங்கள் பாலியல் செயல்திறனைத் தொடர நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள்:

உங்கள் உடல் ஆரோக்கியதைப் பராமரிக்க ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். இந்த பழக்கம் இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது. இதய நோய் பாதிப்பின் காரணமாக ஆணுறுப்பில் தமனிகளில் சேதம் உண்டாகிறது. இதன் காரணமாக விறைப்புத்தன்மை பிரச்சனை என்னும் பாதிப்பு உண்டாக நேரலாம்.மீன் மற்றும் காய்கறிகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. வழக்கமான உடற்பயிற்சி மன ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மற்றும் மனச்சோர்வில் இருந்து தடுத்து மூளையில் நல்ல உணர்வுகளுக்கான ரசாயனத்தை வெளியிடுகிறது.

உடல் பருமனைக் குறைக்கவும்

உடல் பருமனைக் குறைக்கவும்

உடல் பருமன் உள்ள ஆண்களுக்கு பெண் ஹார்மோன் அதிகம் சுரக்கப்பட்டு ஆண் பாலின செயல்பாடுகளில் இடையூறு உண்டாக்குகிறது. அதிக எடை குறைவதாலும் ஈஸ்ட்ரோஜென் அளவில் குறைபாடு தோன்றுகிறது என்று அமெரிக்க மருத்துவ நிறுவனம் கூறுகிறது. BMI என்னும் உடற் குறியீட்டு எண் 30 ஐ விட அதிகம் இருக்கும் ஆண்கள் தங்கள் உடல் எடையில் 10% குறைவதால் விறைப்புத்தன்மை பிரச்சனை என்னும் பாதிப்பு மூன்றில் ஒரு பங்கு குறைவதாக ஆதாரபூர்வமாக கூறப்படுகிறது.

புகைப்பழக்கத்தை கைவிடுங்கள்

இதய நோய்க்கு முக்கிய காரணம் புகைப்பழக்கம், இதன் காரணமாக விறைப்புத்தன்மை பிரச்சனையும் உண்டாகிறது. நுரையீரல் புற்றுநோய் போன்ற இதர நோய்களுடன் புகைப்பழக்கம் தொடர்பில் உள்ளது. புகைப்பழக்கத்தை நிறுத்திய 2 ஆண்டுகளில் உடல் தன்னுடைய இயல்பு நிலைக்கு திருப்புகிறது.

பழங்கள்

பழங்கள்

ப்ளாக்பெர்ரி போன்ற பழங்களில் உயர்ந்த அளவு ஆன்டி-ஆக்சிடன்ட் இருப்பதால், இவை தீங்கு விளைவிக்கும் கூறுகளை வெளியேற்ற உதவுகிறது, மற்றும் இரத்தத்தில் நைட்ரிக் அமிலஅளவை உயர்வாக வைக்க உதவுகிறது. நைட்ரிக் ஆக்சைடு என்பது ஒரு வேதிப்பொருள் ஆகும், இது இரத்த நாளங்களை நீர்த்துப்போகச் செய்ய உதவுகிறது, மேலும் இது விறைப்புத்தன்மையை ஏற்படுத்துவதற்கு முக்கியமானது.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

இரத்த நாளங்களை நீர்த்து போக உதவும் மற்றொரு பொருள் – டார்க் சாக்லேட். இதில் உள்ள பிளேவனாய்டுகள், ஆணுறுப்பிற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. 70% க்கு மேல் கொக்கோ இருக்கும் தரமான டார்க் சாக்லேட் வாங்கி உட்கொள்ளவும் . உயர் கலோரி கொண்ட இனிப்புகளுக்கு மாற்றாக டார்க் சாக்லேட் ஒரு சிறு பகுதி உட்கொள்வது நல்ல பழக்கமாகும்.

தூக்கம்

தூக்கம்

உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு இரவில் ஆழமான தூக்கம் நல்லது. உடல் தன்னைத் தானே சரி செய்து அடுத்த நாளுக்கான புத்துணர்ச்சியை பெறுவதற்கு தூக்கம் மிகவும் அவசியம். தூக்கத்தில் அதிகமாக குறட்டை விடுவது தூக்கத்தில் இடையூறை உண்டாக்கி அடுத்த நாள் சோர்வான உணர்வைத் தரும். இரவு உறங்கச் செல்வதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் முன்னதாக கனமான உணவு அல்லது மது போன்றவற்றை உட்கொள்வது தவிர்க்கப்பட வேண்டியது. இதனால் ஒருவர் நிம்மதியாக தூங்க முடியும்.

மனஅழுத்தம்

மனஅழுத்தம்

இதய நோய் மற்றும் அதன் காரணமாக உண்டாகும் விறைப்புத்தன்மை பிரச்சனை போன்ற பாதிப்புகளுக்கு மனஅழுத்தம் ஒரு காரணமாகும். வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை, வழக்கமான உடற்பயிற்சி, போதுமான தூக்கம், புகை மற்றும் மது பழக்கத்தை தவிர்ப்பது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி மனஅழுத்தத்தைத் தவிர்க்கலாம். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவழித்து மனஅழுத்தத்தை தவிர்க்கலாம். மனஅழுத்தம் பாலியல் உணர்வை அழித்துவிடும் . யோகா, தியானம் அல்லது மருத்துவ ஆலோசனை போன்றவை உங்கள் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும். ஆகவே அவற்றையும் நீங்கள் முயற்சிக்கலாம்.

பாலியல் உறவு

பாலியல் உறவு

நம்மை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் ஆரோக்கியமாகவும் தன்னம்பிக்கையுடனும் வைத்துக் கொள்ள பல வழிகள் உள்ளன. திருமணமான தம்பதிகளுக்கு இடையில் பாலியல் உறவு என்பது ஒரு முக்கிய பகுதியாகும், இதனை முழுவதும், உணர்வுபூர்வமாக அனுபவிப்பது கணவன் மனைவி இருவருக்கும் நல்லது. பாலியல் திருப்தியை பெறுவதற்கு ஏற்ற ஆலோசனைகள் பெறுவதில் எந்த ஒரு தவறும் இல்லை. சாப்பிடுவது, சுவாசிப்பது போல் இதுவும் வாழ்வின் முக்கிய அங்கமாகும். உறுதியான திருமண பந்தத்தில், பாதுகாப்பான முறையில் பாலியல் ஆரோக்கியத்தை நிர்வகிப்பது சந்தோஷமான மற்றும் ஆரோக்கியமான வாழ்வை தரும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker