சமையல் குறிப்புகள்
குழந்தைகளுக்கு விருப்பமான கேரட் தேங்காய் பர்ஃபி
தேவையான பொருட்கள் :
- தேங்காய்த் துருவல் – கால் கப்
- கேரட் துருவல் – கால் கப்
- சர்க்கரை – ஒரு கப்
- நெய் – தேவையான அளவு
- ஏலக்காய் – 4 (பொடித்துக் கொள்ளவும்).
செய்முறை:
- வாணலியில் தேங்காய்த் துருவல், கேரட் துருவல், சர்க்கரை சேர்த்து தீயை மிதமாக்கி கிளறவும்.
- இடைஇடையே நெய் சேர்த்து கிளறவும்.
- சர்க்கரை தானே இளகி வரும்போது கேரட் துருவல் வெந்துவிடும்.
- கலவை சுருண்டு நெய் வெளியில் வரும்போது ஏலக்காயை சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விட்டு துண்டுகள் போடவும்.
- சுவையான கேரட் தேங்காய் பர்ஃபி ரெடி