குழந்தைகளுக்கு புராண கதைகளை சொல்லுங்க
குழந்தைகளை வீட்டில் வைத்து சமாளிப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. பெரும்பாலும் குழந்தைகள் விருப்பப்பட்டதை கேட்டு கொடுக்காவிட்டால் கத்தி அழுது ஊரையே கூட்டி விடுவார்கள். அதற்கு எளிய தேர்வு அவர்களின் கவனத்தை சிதற வைப்பதே. வேறு ஏதாவது விஷயத்தில் அவர்களது கவனம் செல்லும் படி திசை திருப்ப முயன்றால் அடம் பிடிக்கும் குழந்தைகளை சற்று சமாதானப் படுத்த முடியும்.
குழந்தைகளை விடுமுறையில் மொபைல் போன்களில் அடிமை படுத்தாமல் புராண கதைகளையும், நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுத் தர பழக்க வேண்டும். நகைச்சுவை கலந்த தெனாலி ராமன் கதைகள், ஜோக்குகள் என கூறி குழந்தையை ஆனந்தமாக வைத்திருக்க முயற்சித்தால் நன்று
குழந்தைகள் அடம் பிடிக்கும் பொழுது வீட்டில் உள்ள இருவரும் சேர்ந்து குழந்தையை திட்ட கூடாது. மாறாக அப்பாவோ, அம்மாவோ குழந்தைக்கு தவறை அமைதியான முறையில் உணர்த்தச் செய்ய வேண்டும்.
குழந்தைகளை சமாளிக்க அடித்து வளர்ப்பது என்பது உங்கள் எதிர்காலத்தில் குழந்தைக்கு உங்கள் மீது உள்ள உறவை பாதிக்கும் செயல். பெரும்பாலும் அதனை தவிர்க்க வேண்டும். உங்கள் பேச்சை கேட்காவிட்டால் பொறுமையாக எடுத்துக் கூற வேண்டும்.
குழந்தைகள் என்றாலே சுட்டித் தனம் இருக்கத்தான் செய்யும். அதற்காக சிறு வயதிலே பெரியவர்களை போல் நடந்து கொள்ளும் படி வற்புறுத்தாமல் அவர்களோடு சேர்ந்து நீங்களும் பழகி பாருங்கள். குழந்தைகள் உங்களுக்கு சில பாடங்களை கற்றுக்கொடுக்கும்.