சமையல் குறிப்புகள்

பச்சைப் பட்டாணி போண்டா

தேவையான பொருட்கள் :

 • வேகவைத்த பச்சைப் பட்டாணி – 200 கிராம்
 • கேரட் துருவல் – ஒரு டீஸ்பூன்
 • பச்சை மிளகாய் – 2
 • கொத்தமல்லித்தழை – சிறிதளவு
 • புதினா சிறிதளவு – சிறிதளவு
 • எண்ணெய் – 300 கிராம்
 • உப்பு – தேவையான அளவு.மேல் மாவுக்கு:

 • கடலை மாவு – 150 கிராம்
 • அரிசி மாவு – 25 கிராம்
 • மிளகாய்த்தூள், உப்பு – சிறிதளவு.

செய்முறை:

 • ப.மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வேகவைத்த பச்சைப் பட்டாணி, உப்பு சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும்.
 • பின்னர் அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா, கேரட் துருவல் சேர்த்துப் பிசையவும்.
 • இதை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
 • மேல்மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் தேவையான நீர் சேர்த்து தோசை மாவைவிட சற்றே தளர்வாக கரைக்கவும்.
 • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் வைத்து சூடானவுடன் செய்து வைத்திருக்கும் உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
 • சூப்பரான பச்சை பட்டாணி போண்டா ரெடி.
 • குறிப்பு: பச்சைப் பட்டாணி இல்லாத சமயத்தில் உலர்ந்த பட்டாணியை ஊறவைத்து வேகவிட்டு அரைத்து பயன்படுத்தியும் இந்த போண்டாவை செய்யலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker