சமையல் குறிப்புகள்

குடைமிளகாய் ஸ்டப்ஃடு முட்டை இட்லி

தேவையான பொருட்கள்:

 • குடைமிளகாய் – 4
 • முட்டை- 4
 • வெங்காயம் – 4
 • பச்சை மிளகாய் – 4
 • கேரட் – 2
 • மிளகு தூள் – சிறிதளவு
 • சீரகத்தூள் – சிறிதளவு
 • மஞ்சள்தூள் – சிறிதளவு
 • மிளகாய்த்தூள் – சிறிதளவு
 • உப்பு – தேவையான அளவு
செய்முறை :

 • குடமிளகாய் மேல்பகுதியை கட் பண்ண வேண்டும். அதில் இருக்கும் விதைகளை எடுக்க வேண்டும்
 • ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • கேரட்டை துருவிக்கொள்ளவும்.
 • 4 முட்டைகளையும் 4 வெவ்வேறு டம்ளர்களில் ஊற்ற வேண்டும்.
 • 4 டம்ளர்களிலும் மிளகுத்தூள், சீரகத்தூள ,தேவைக்கேற்ப உப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், கேரட், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 • 4 டம்ளர்களிலும் ஸ்பூனை வைத்து கலந்துகொள்ள வேண்டும்.
 • இந்த நான்கு டம்ளர்களில் உள்ள கலவையும் நான்கு குடைமிளகாயில் ஊற்றவேண்டும்.
 • அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி இட்லி தட்டின் மேல் இந்த நான்கு குடைமிளகாய் வைத்து ஆவியில் 15 நிமிடங்கள் வேக விட வேண்டும்.
 • சூடான சுவையான குடைமிளகாய் ஸ்டப்ஃடு முட்டை இட்லி தயார் .


Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker