சமையல் குறிப்புகள்

குஜராத்தி ஸ்பெஷல் சுரைக்காய் முட்டியா

தேவையான பொருட்கள் :

 • சுரைக்காய் – 1
 • கடலை மாவு – 1 டம்ளர்
 • கோதுமை மாவு – 1 குழிக்கரண்டி
 • அஸ்கா – 2 டீஸ்பூன்
 • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
 • மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
 • தயிர் – 1 டம்ளர்
 • கொத்துமல்லி – 1 கப்
 • சோடா உப்பு – அரை டீஸ்பூன்
 • உப்பு – தேவைக்கேற்ப
 • வெள்ளை எள் – 50 கிராம்
 • எண்ணெய் – தேவையான அளவு
 • கடுகு – 1 டீஸ்பூன்
 • கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை :

 • கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்
 • சுரைக்காயை தோல்சீவி துருவி வெள்ளைத் துணியில் பிழிந்து கொள்ளவும்.
 • சுரைக்காய், கடலைமாவு, கோதுமை மாவு, அஸ்கா, மஞ்சள் தூள், தயிர், கொத்த மல்லி, சோடா, உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
 • பிசைந்த மாவை நீளமாக நேந்திரன் பழ அளவு உருட்டிக் கொள்ளவும்.
 • உருட்டியவற்றை இட்லி பானையில் வைத்து 25 நிமிடம் வேக வைக்கவும்.
 • வெந்தவுடன் அதன் மேல் எண்ணெய், கடுகு, வெள்ளை எள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
 • புதினா மல்லிச்சட்டினியுடன் பரிமாறவும்.
 • சூப்பரான சுரைக்காய் முட்டியா ரெடி.


Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker