சமையல் குறிப்புகள்
குஜராத்தி ஸ்பெஷல் சுரைக்காய் முட்டியா
தேவையான பொருட்கள் :
- சுரைக்காய் – 1
- கடலை மாவு – 1 டம்ளர்
- கோதுமை மாவு – 1 குழிக்கரண்டி
- அஸ்கா – 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- தயிர் – 1 டம்ளர்
- கொத்துமல்லி – 1 கப்
- சோடா உப்பு – அரை டீஸ்பூன்
- உப்பு – தேவைக்கேற்ப
- வெள்ளை எள் – 50 கிராம்
- எண்ணெய் – தேவையான அளவு
- கடுகு – 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை :
- கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்
- சுரைக்காயை தோல்சீவி துருவி வெள்ளைத் துணியில் பிழிந்து கொள்ளவும்.
- சுரைக்காய், கடலைமாவு, கோதுமை மாவு, அஸ்கா, மஞ்சள் தூள், தயிர், கொத்த மல்லி, சோடா, உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
- பிசைந்த மாவை நீளமாக நேந்திரன் பழ அளவு உருட்டிக் கொள்ளவும்.
- உருட்டியவற்றை இட்லி பானையில் வைத்து 25 நிமிடம் வேக வைக்கவும்.
- வெந்தவுடன் அதன் மேல் எண்ணெய், கடுகு, வெள்ளை எள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
- புதினா மல்லிச்சட்டினியுடன் பரிமாறவும்.
- சூப்பரான சுரைக்காய் முட்டியா ரெடி.