சமையல் குறிப்புகள்
சூப்பரான பாலக் புலாவ்
தேவையான பொருட்கள் :
- பாசுமதி அரிசி – 1 கப்
- பாலக்கீரை – 1 கப்
- வெங்காயம் – 2
- வெங்காயத்தாள் – 1 கட்டு
- பச்சை மிளகாய் – 2
- இஞ்சிபூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
- வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
- முந்திரிபருப்பு – 10
தாளிக்க:
- பட்டை – 1
- கிராம்பு – 2
- ஏலக்காய் – 2
- சோம்பு – 1 தேக்கரண்டி
செய்முறை:
- பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- வெங்காயத்தாள், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பாசுமதி அரிசியை நன்றாக கழுவி தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.
- குக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதனுடன் பொடியாக நறுக்கிய பாலக் கீரை, வெங்காயத்தாள், பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
- எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் ஊறவைத்த அரிசியுடன் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.
- விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து முந்திரியை நெய்யில் வறுத்து சேர்த்து பரிமாறவும்.
- சூப்பரான பாலக் புலாவ் ரெடி.