அழகு..அழகு..

மணப்பெண் ஹேர் கலரிங் செய்யும்போது கவனிக்க வேண்டியவைகள்

திருமண நாளில் தலையில் அணிவது முதல் கால் பாதத்தில் அணிவது வரை எல்லாம் நேர்த்தியாக இருக்க வேண்டும். நீங்கள் ஆடை மற்றும் நகை அலங்காரம் செய்து கொள்வதில் கவனம் செலுத்தும்போது, உங்கள் கூந்தல் அலங்காரத்தை மேம்படுத்திக்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் திருமண நாளுக்கான தலைமுடி நிறத்தை தேர்வு செய்வது என்று வரும் போது, உங்கள் மண நாள் தோற்றத்தை பாதிக்காத வகையில் சரியான தலைமுடி நிறத்தை தேர்வு செய்வதற்கு வழி காட்டுகிறோம். உங்கள் கூந்தலை டை செய்து கொள்வதற்கு முன் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய அம்சங்களை பார்க்கலாம்…

· உங்கள் ஸ்கின்டோன்
· உங்களுக்கான மணப்பெண் தோற்றம்
· உங்கள் கூந்தலின் தன்மை



ஒரு சில கூந்தல் வண்ணங்கள் கண்களை எடுப்பாக்கி, உங்கள் தோற்றத்தை மேலும் பொலிவாக்க கூடியவை என்றாலும், ஒரு சில வண்ணங்கள் அவற்றை பாதித்துவிடக்கூடும். இது நிச்சயம் நீங்கள் விரும்பக்கூடியதல்ல. சிவந்த அல்லது நல்ல நிறம் கொண்ட சருமம் எனில், பர்கண்டி அல்லது உட் அல்லது ஹனி ஹைலைட்ஸ் ஷேடை நாடலாம். மாநிறம் அல்லது கோதுமை நிறம் கொண்ட சருமம் எனில், அடர் சிவப்பு அல்லது கோல்டன் ஹைலைட்ஸ், டீப் பிரவுனை நீங்கள் நாடலாம்.

உங்கள் ஆடைகளும், தோற்றமும் உங்கள் ஆளுமைக்கு பொருத்தமாக இருக்க வேண்டும். உங்கள் திருமண நாளுக்கான மணப்பெண் தோற்றம் பற்றி நன்றாக யோசியுங்கள். ஏனெனில் உங்கள் கூந்தலின் வண்ணம் அதை பாதிக்கலாம். பாரம்பரிய மணப்பெண் தோற்றமா அல்லது நவீன மணப்பெண் தோற்றமா அல்லது ஐரோப்பிய பாணியிலான தோற்றமா? என்பதை பொருத்து இது அமையும். குளிர்ந்த ஷேட் கொண்ட நுட்பமான தோற்றம் நேர்த்தியான மணப்பெண் தோற்றத்திற்கு வலு சேர்க்கும். தேவதை போன்ற மணப்பெண் தோற்றம் எனில், காரமெல் பிரவுன் அல்லது ஹாஸ்லேநெட் ஷேட் பொருத்தமாக இருக்கும்.



உங்கள் கூந்தல்… அலை போன்றதா? சுருளானதா? நேரானதா? என்பதும் முக்கியம். உங்கள் இயற்கையான கூந்தல் வண்ணத்தை விட சற்று மங்கலான ஓம்ப்ரே ஹைலைட்ஸ் அலை போன்ற மற்றும் சுருளான கூந்தலுக்கு பொருத்தமாக இருக்கு. நீளமான, நேரான தலைமுடி எனில், டீப் ரெட் அல்லது டீப் பிரவுன் அல்லது நீலம் போன்ற குளிர்ந்த ஷேடை நாடலாம். சிடுக்கான முடி எனில், ஹைலைட்டை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை கூந்தலின் தன்மை மீது அதிக கவனத்தை குவிக்கும். அதற்கு மாறாக, டீப் டை அல்லது முழு ஹேர் கலரில் நுட்பமான ஷேடை நாடவும்.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker