தாய்மை-குழந்தை பராமரிப்பு

தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைகளை பராமரிப்பது எப்படி?

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுகிறோம். அதன் பிறகு குழந்தைகளுக்கான பராமரிப்பு எப்படி இருக்க வேண்டும் எனப் பலருக்கும் தெரிவதில்லை. தடுப்பூசி போட்ட பிறகு பின் விளைவுகள் வருவது பொதுவான விஷயம்தான். அதை எப்படி எதிர்கொள்வது? குழந்தைகளை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட பின்னர் மருத்துவரிடம் இதன் பிறகான பராமரிப்புகளைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஈரமான துணியை ஊசி போட்ட இடத்தில் வைத்து லேசாகத் தொட்டு தொட்டு எடுக்கவும். காய்ச்சல் வந்தால், தண்ணீரில் நனைத்த துணியை உடலில் தொட்டு தொட்டு எடுக்கவும். தடுப்பூசி போட்ட இக்காலத்தில் குழந்தைகள் குறைவாகவே சாப்பிடுவார்கள். இதற்காக பயம் வேண்டாம். அது நார்மல்தான். கொஞ்சம் அதிக கவனத்தை குழந்தைகள் மேல் வையுங்கள்.

தடுப்பூசி போட்ட இடத்தில் வலி, வீக்கம், சிவப்பாகுதல். ஊசி போட்ட பிறகு 1-2 நாட்கள் காய்ச்சல் வரலாம். எம்.எம்.ஆர் அல்லது சிக்கன் பாக்ஸ் தடுப்பூசி போட்ட பிறகு, காய்ச்சல், அரிப்பு போன்றவை ஒரு வாரம் அல்லது ஒரு வாரத்துக்கு மேல் நீடிக்கலாம்.



குழந்தை அமைதியாக தூங்குகிறதா எனக் கவனியுங்கள். அக்குள் பகுதியில் தர்மாமீட்டர் வைத்துப் பார்க்கலாம். டிஜிட்டல் தர்மானீட்டர் பயன்படுத்தி, உடலின் வெப்பநிலையைக் கண்டறியலாம். ஒவ்வொரு 4 மணி நேரத்துக்கு ஒருமுறை காய்ச்சலின் வெப்பநிலையைக் கணக்கெடுங்கள்.

லேசான ஆடையை அணிவியுங்கள். பெரும்பாலான துணிகளை நீக்கிவிடுங்கள். மின்விசிறி உள்ள அறையில் குழந்தையை படுக்க வையுங்கள். காற்றோட்டம் இருக்கட்டும். நீர்ச்சத்து உணவுகளைக் கொடுங்கள்.

அலட்சியப்படுத்த கூடாத அறிகுறிகள்…

தடுப்பூசி போட்ட பிறகு, இந்தப் பிரச்னைகள் வருவது மிகவும் அரிது. ஆனால், இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகவும். உதடு, நாக்கு வீங்குதல், பெரிதாகுதல் அதிகமான காய்ச்சல் (39°C/102.2°F அல்லது இதைவிட அதிகம்) பலவீனமாகுதல் தூக்கம் இல்லாமல் இருப்பது தூக்கத்திலிருந்து எழுப்ப முடியாமல் போவது சாப்பிடகூட எழுந்திருக்காத குழந்தை 3 மணி நேரத்துக்கும் மேல் குழந்தை அழுது கொண்டே இருப்பது சாதாரணமாக அழுவதைவிட இயல்புக்கு மாறாக குழந்தை அழுவது சருமத்தில் சிவப்பாக திட்டு திட்டாக தோன்றுதல் உதறுதல், வலிப்பு வருவது போல இழுத்தல் வயிறு வீக்கம் மலத்தில் ரத்தம் வருதல் அடிக்கடி வாந்தி எடுத்தல் 48 மணி நேரம் ஆகியும் காய்ச்சல் இருத்தல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரிடம் செல்வது நல்லது.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker