PCOS பிரச்சினையில் இருந்து விடுபட தவிர்க்க வேண்டிய உணவுகள்…
தற்போது இருக்கும் நவீன உலகில் புதிதாக பல நோய்கள் நம்மை தாக்க தொடங்கி உள்ளன. பழங்காலத்தில் அனைவருக்கும் சுகப்பிரசவம் ஆன காலம் போய் இப்போது யாரைக் கேட்டாலும் சிசேரியன் என்று கூறுகின்றனர். நம் உணவு முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவே இது போன்றவை நிகழ்கிறது.
PCOS பிரச்சினை இருப்பவர்கள் சர்க்கரை சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும். வெள்ளை சர்க்கரை உடலுக்கு கேடு வெல்லம் பனங்கற்கண்டு போன்றவை உடலுக்கு நல்லது என்ற தப்பான ஒரு விஷயம் பரவி வருகிறது. வெள்ளை சர்க்கரை, வெல்லம், பனங்கற்கண்டு ஆகிய மூன்றிலும் ஃபிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் இருக்கும். ஃபிரக்டோஸானது உடலுக்கு தீங்கையே தரும். அதனால் எந்த விதமான இனிப்பையும் குறைத்து கொள்வது நல்லது.
டிரான்ஸ் பேட்டை பல நாடுகளில் தடை செய்த போதிலும் அது குறைவான விலையில் கிடைப்பதால் இன்னும் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பேக்கரிகளில் வாங்கப்படும் பேஸ்ட்ரீஸிலும், ஒரு சில ஹோட்டல்களில் விற்கப்படும் பிரியாணியிலும் இந்த டிரான்ஸ் பேட்டை பயன்படுத்துகின்றனர். PCOS பிரச்சினை இருப்பவர்கள் கண்டிப்பாக இதனை தவிர்க்க வேண்டும்.
அடுத்தாக PCOS பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சாய் சம்மந்தப்பட்ட உணவுகளை உண்ண வேண்டாம். சாய்களில் ஜெனிஸ்டீன், டெய்டுஜீன் என்ற இரு பொருட்கள் அதிகமாக காணப்படுகிறது. PCOS பிரச்சினை இருப்பவர்களுக்கு இந்த பொருட்கள் அறவே ஆகாது.
PCOS பிரச்சினை இருப்பவர்களுக்கு தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற இன்னல்கலால் அவதிப்படுவார்கள். கஃபீனை காபி, டீ, குளிர் பானங்கள் போன்ற எந்த வகையிலாவது உட்கொண்டால் இந்த இன்னல்களை அது இன்னும் அதிகப்படுத்தும். மேலும் மது பழக்கத்தை அறவே விட்டு விட வேண்டும். மேலும் மைதா, ஜன்க் ஃபுட், பிராஸஸ் செய்யப்பட்ட உணவுகளையும் தவிர்த்தல் நலம்.