ஆரோக்கியம்மருத்துவம்

உட்கார்ந்தே இருந்தால்… உடல் நலம் பாதிக்கும்

‘தினமும் 9 மணி நேரத்திற்கும் அதிகமாக உட்கார்ந்திருந்தால் ஆயுள் குறையும்’ என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆய்வை பிரிட்டிஷ் மெடிக்கல் ஜார்னல் வெளியிட்டுள்ளது.

* அதிக நேரம் உட்கார்ந்திருப்பது வயதானவர்களை மட்டுமின்றி நடுத்தர வயதினரையும் பாதிக்கிறது.* உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, 18 வயது முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியோ அல்லது 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியோ அல்லது அதற்கு ஈடான உடல் உழைப்பையோ கொண்டிருக்க வேண்டும்.

* அவை நடப்பது, சமைப்பது, பாத்திரங்கள் கழுவுவது, மூச்சுப் பயிற்சி மேற்கொள்வது போன்றவையாகவும் இருக்கலாம். உடல் உழைப்பு கொண்ட வேலைகள் மிதமான உடற் பயிற்சியில் அடங்கும்.

* இந்த ஆய்வை மேற்கொண்ட இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் டாம் யேட்ஸ், ‘‘உடல் இயக்க செயல்பாடுகளின் அடிப் படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முந்தைய ஆய்வுகளை விட சிறப்பான முடிவை கொடுத்துள்ளது.

* அதிக நேரம் உட்கார்ந்திருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலானது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது’’ என்கிறார். தொடர்ச்சியாக உட்கார்ந்திருக்காமல் அவ்வப்போது எழுந்து நிற்பதும், நடப்பதும் உடலுக்கு நல்லது.


Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker