தினமும் இந்த விஷயங்களை செய்தால் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்
நம்மிடம் உள்ள சில பழக்க வழக்கங்கள் கூட புற்று நோய் வர காரணமாக அமையும். அவற்றில் சிலது உணவுப்பழக்கமாக கூட இருக்கலாம். சில அழகுப் பொருட்களையும் நாம் தொடர்ந்து உபயோகிக்கும் போது நமக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. அதை பற்றி இங்கு காண்போம்.
புற்று நோய் எப்படி ஏற்படுகிறது என அனைவருக்கும் சந்தேகம் இருக்கும். நம் டி,என்,ஏ வில் ஏற்படும் மரபணு மாற்றத்தின் காரணமாகதான் புற்று நோய் ஏற்படுகிறது. நம்முடைய செல்களானது கட்டுப்பாடற்ற முறையில் வளர்ந்து முறியவும் செய்யும். அப்படி முறியும் செல்கள் கட்டிகளாக வளரும் போது தான் புற்று நோய் நமக்கு ஏற்படுகிறது. இது சில சமயங்களில் பரம்பரை நோயாகவும் மாறி விடுகிறது.
எனவே கீழே உள்ள செயலில் நீங்கள் தொடர்ச்சியாக ஏதேனும் செய்தால் உங்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
* சிகரெட் குடிப்பது தவறு என்றும் தெரிந்தும், சிலர் அதற்கு அடிமையாகி உள்ளனர். இதிலும் சந்தைக்கும் இ சிகரெட் என்ற ஒன்றை புதுசாக அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த இ சிகரெட்டுகளில் புகை மற்றும் தார் போன்ற பொருள்கள் இல்லை என்றாலும், நிகோடின் மற்றும் பிற சுவைகளை அது தருகிறது. எனவே சிகரெட் மற்றும் ஏ-சிகரெட் குடிப்பர்வர்களுக்கு புற்றுநோய் வர கண்டிப்பாக வாய்ப்புள்ளது. எப்பொழுதாவது ஒரு முறை பயன்படுத்தினால் சரி, இதற்கு அடிமையாக இருப்பவர்களுக்கு புற்று நோய் வரும் அபாயம் உள்ளது.
* ஹாம், பன்றி, சலாமி போன்றவற்றின் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உண்ணும் போது நமக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இவை டைப் ஒன்று புற்றுநோயை உருவாக்கி விடும். சிவப்பு இறைச்சி குழுவான மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, மற்றும் பன்றி இறைச்சி ஆகிய உணவுகள் புகையூட்டப்பட்டும், பதப்படுத்தி உண்ணும் போதும் டைப் 2 புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
* சூடான தேநீர் மற்றும் காபி நாம் அருந்துவதால் நம் உணவுக்குழாய் பாதிப்படைகிறது. இதனால் புற்று நோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 700 மிலி டீ அல்லது காபி குடிப்பதால், உணவுகுழாய் பாதிக்கப்பட்டு 90% புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது
* தங்கள் முடியை அழகுபடுத்துவதற்காகவும், தங்கள் தோற்றத்தை வேறுபடுத்தி காண்பிக்கவும் பெரும்பாலான பெண்கள் ஹேர் டை பயன்படுத்துகிறார்கள். இவற்றில் சில நிரந்தரமாக தலையில் ஒட்டிக்கொள்ளும். முடியின் ஸ்டைலை மாற்றுவதற்கு ஹேர் ஸ்ட்ரெய்ட்னர் பயன்படுத்துவதால் முடியின் வடிவமைப்பே மாறிவிடுகிறது. இதை அதிகமாக உபயோகிக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.