சமையல் குறிப்புகள்
பாதாம் பருப்பு பாயாசம்
தேவையான பொருட்கள் :
- பாதாம் பருப்பு – 100 கிராம்
- பால் – 3 கப்
- சர்க்கரை – 1 கப்
- ஏலக்காய் – 7
- முந்திரி பருப்பு – 6
- பிஸ்தா பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- குங்குமப்பூ அல்லது கேசரிப் பவுடர்- சிறிதளவு
- நெய் – 3 டீஸ்பூன்
செய்முறை :
- முதலில் முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக உடைத்து கொள்ளவும்.
- பின்னர் அதை பிஸ்தா பருப்புடன் சேர்த்து நெய்யில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
- இதையடுத்து பாதாம் பருப்பைக் கொஞ்சம் சூடான வெந்நீரில் போட்டு, ஒரு மணி நேரம் கழித்துத் தோலை எடுத்து விட்டு, அம்மியில் அல்லது மிக்சியில் நைசாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- அதை 3 கப்பு தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அடிக்கடி கிளறிவிடவும். பச்சை வாசனை இல்லாமல் நன்றாக கொதிக்கவிட்டு, சர்க்கரையைப் போடவும்.
- சர்க்கரை நன்றாக கரைந்தபின் பாலை ஊற்றி மற்ற பொருட்களையும் போட்டு கொதித்தவுடன் இறக்கிவிடவும்.
- அடுத்து நெய், குங்குமப்பூ சேர்த்தால் சுவையான பாதாம் பருப்பு பாயாசம் தயார்.