ஆரோக்கியம்

தொண்டை பிரச்சினைகளுக்கு நவீன சிகிச்சை

நம்மில் பலருக்கு அடிக்கடி தொண்டை வலி, விழுங்குவதில் சிரமம், தொண்டையில் எரிச்சல், தொண்டையில் கரகரப்பு, அதிக உமிழ்நீர் வடிதல், தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டிருப்பது போன்ற அறிகுறிகள் வருடத்தில் பல தடவைகள் வந்து போவதுண்டு. பலர் இத்தகைய அறிகுறிகளை அலட்சியம் செய்துவிட்டு அவ்வப்போது கிடைக்கின்ற தற்காலிக நிவாரணிகளை உட்கொண்டு அறிகுறிகளை மறக்கடித்து வருகின்றனர்.

இத்தகைய நடவடிக்கையால் இந்த நோயின் அடிப்படை காரணமான பி-ஹீமாலிடிக் ஸ்டெப்டோ காக்கை என்னும் ஒருவித நச்சுக்கிருமி ரத்தத்தில் வீரியமடைந்து, நாளடைவில் அதன் நச்சுத்தன்மை கால், மூட்டுகள், இதயம் மற்றும் சிறுநீரகங்கள் நிரந்தர பாதிப்புக்கு உட்படுத்தி விடும் என்பது நம்மில் பலருக்கு தெரியாத விஷயம்.மேல் சுவாசக்குழாய் தொற்று உள்ளவர்களுக்கு இந்த நோய் அதிகமாக ஏற்படுகிறது. அதாவது அடிக்கடி சளிப்பிடித்தல், மூக்கு தண்டு வளைவு ஏற்பட்டு மூக்கு துவாரங்கள் அடிக்கடி அடைப்பு ஏற்படுபவர்களுக்கு சைனஸ் காற்றறைகள் பாதிக்கப்பட்டு சைனஸ் காற்றறைகளில் சீழ் பிடித்துக்கொள்ளும். அவ்வாறு சீழ் பிடித்துக் கொள்ளும்போது அந்த சீழ் மூக்கு தொண்டையின் பின் பாகமாக வடிந்து வாய் தொண்டையின் மெல்லிய சுவர்களை பாதித்து அலர்ஜியை ஏற்படுத்துகிறது.

அதன் விளைவாக தொண்டையில் உள்ள டான்சிங் கட்டிகள் பழுத்து அத்துடன் தொண்டையின் 3 பக்கங்களிலும் உள்ள மெல்லிய ஜவ்வுகளில் பாதிப்பை ஏற்படுத்தி சிவந்து தொண்டையில் வலியை ஏற்படுத்துகிறது. இந்த வேளைகளில் வீரியம்மிக்க பீட்டா ஸ்டப்டோக்காக்கை அந்த பகுதியில் பல கோடிக்கணக்கில் பெருக்கம் அடைந்து அதன் காரணமாக நச்சுத்தன்மை ரத்தத்தில் கலக்கிறது.

ஆய்வுக்கூடம் மூலமாகவும் தகுந்த மருத்துவ பரிசோதனை மூலமாகவும் கண்டறியப்பட்ட தொண்டை வலியின் அடிப்படைக் காரணங்களை தகுந்த தொடர் மருத்துவ சிகிச்சை மூலமாகவோ அல்லது தேவைப்பட்டால் நவீன சைனஸ் அறுவை சிகிச்சை மற்றும் டான்சில் அறுவை சிகிச்சை மூலமாக இத்தகைய உயிருக்கே உலைவைக்கும் தொண்டை வலி நோயிலிருந்து நிரந்தரமாக விடுதலை பெறலாம்.


 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker