சமையல் குறிப்புகள்
அருமையான கிராமத்து கறிக்குழம்பு
தேவையான பொருட்கள்
- ஆட்டுக்கறி – 1 கிலோ
- பெரிய தக்காளி – 2
- சின்ன வெங்காயம் – 10
- காய்ந்த மிளகாய் – 10
- எண்ணெய் – தேவையான அளவு
- சோம்பு – ½ ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- பூண்டு – 5 பல்
- ஏலக்காய் – 2
- துருவிய தேங்காய் – 1/4 கப்
- மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
- பட்டை -1 துண்டு
- லவங்கம் – 2
- கசகசா – 1 ஸ்பூன்
- மிளகு – 2 ஸ்பூன்
- தனியா – 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- கொத்தமல்லி தழை – சிறிதளவு
- கடுகு – 1 ஸ்பூன்
- சீரகம் – 1 ஸ்பூன்
- உளுந்து – 1 ஸ்பூன்
- கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
செய்முறை
- முதலில் கறியை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
- பின்னர் கறியில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு என அனைத்தையும் தனித்தனியே போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- வறுத்த பொருட்களுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் என அனைத்தையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- இன்னொரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, என அனைத்தையும் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பூண்டு ஆகிய இரண்டையும் போட்டு நன்கு வதக்கவும்.
- அனைத்தும் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
- அத்துடன் வேகவைத்த ஆட்டுக் கறியை சேர்க்கவும்.
- அரைத்த விழுது, மஞ்சள் தூள், தண்ணீர், உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து எண்ணெய் நன்கு திரண்டு வரும் வரையில் கொதிக்க விடவும்.
- நன்கு கொதித்த பிறகு கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லியை தாளித்து கொட்டி இறக்கினால் சுவையான கிராமத்து கறிக்குழம்பு ரெடி..