சமையல் குறிப்புகள்
சத்தான ஸ்நாக்ஸ் பொட்டுக்கடலை லட்டு
தேவையான பொருள்கள் :
- பொட்டுக்கடலை – 200 கிராம்
- வெல்லம் – 100 கிராம்
- முந்திரிப் பருப்பு – 10
- நெய் – 3 மேஜைக்கரண்டி
- மிதமான வெந்நீர் – 50 அல்லது 75 ml
செய்முறை :
- பொட்டுக்கடலை மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
- வெல்லத்தை துருவி கொள்ளவும்.
- இரண்டையும் ஒரு பாத்திரத்தில் நன்றாக கலந்து வைக்கவும்.
- பின்னர் வெந்நீர் மற்றும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாகும் வரை நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
- எலுமிச்சை அளவு மாவை எடுத்து நன்றாக உருண்டையாக உருட்டி வைக்கவும். மீதமுள்ள மாவையும் இவ்வாறே செய்யவும்.
- சுவையான பொட்டுக் கடலை லட்டு ரெடி.
- இது குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடிய சத்தான லட்டு.