மார்பக புற்றுநோய் வந்தால் மார்பகத்தை அகற்ற வேண்டுமா?
இன்றைய உலகில் பெண்களை அச்சுறுத்தும் வகையில் மார்பக புற்றுநோய் உருவாகிக் கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்பக புற்றுநோயால் லட்சக்கணக்கில் மரணம் ஏற்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் பெண்களுக்கு அதிக அளவில் இந்த நோய் ஏற்படுகிறது. புற்றுநோயை குணப்படுத்தும் அரிய மருத்துவ முறைகள் தற்போது வந்து விட்டன. சித்த மற்றும் ஆங்கில முறை இணைந்த நவீன மருத்துவம் மூலம் புற்று நோயை முற்றிலும் குணப்படுத்துவதுடன் திரும்பவும் வராமல் செய்து விடலாம்.
துவக்க நிலை மார்பக புற்றுநோய் சாதாரணமாக வலியை உண்டாக்காது. மார்பக புற்றுநோய் வளரத் தொடங்கும் போது எந்தவித அடையாளமும் இருக்காது.
ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களின் மனதில் தோன்றும் முதல் எண்ணம் அவர்களின் மார்பகத்தை அகற்றக்கூடும் என்பதுதான். போதிய விழிப்புணர்வு இல்லாததால், மார்பகத்தை அகற்றுவதே ஒரே வழி என்று பெண்கள் நினைக்கிறார்கள். ஆனால், புற்றுநோயை குணப்படுத்த மார்பகத்தை முழுவதுமாக அகற்ற வேண்டியதில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மார்பகப் புற்றுநோய்க்கு வெவ்வேறு வகையான அறுவை சிகிச்சைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான நன்மைகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு விதமான அறுவை சிகிச்சையின் நன்மை மற்றும் தீமைகள் குறித்த தகவல்களைப் பெற்று, அவற்றில் சரியானதைத் தீர்மானிக்க வேண்டும். மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மிகவும் பொதுவான ஒரு புற்றுநோயாக மாறியுள்ளது. மேலும் இதில் தாமதமான நோய்க் கண்டறிதல்,பெண்களில் அதிக இறப்பு விகிதத்திற்கு வழிவகுக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.