வழுக்கையில் முடி வளர உதவும் பூண்டு எண்ணெய்
இன்றைய காலத்தில் இருக்கும் மிக பெரிய பிரச்சனை என்ன என்று தேடினால் கண்டிப்பாக அது முடி உதிர்தல் ஆக தான் இருக்கும். குறிப்பாக ஏசி உள்ள இடங்களில் வேலை செய்வோர், இரவில் அதிக நேரம் விழித்திருந்து வேலை செய்பவர்கள், போன்றவர்களுக்கு இந்த முடி உதிர்வு அதிகமாக இருக்கும். இதனால் தான் வெளி நாடுகளுக்கு சென்று வேலை செய்பவர்களுக்கு முடி உதிர்தல் அதிகமாக உள்ளது.
எது எப்படி போனாலும் முடி உதிர்தல் எம் இளமையையும் முதுமையாக்கிவிடும். இவற்றுக்கு வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை கொண்டு இலகுவாக எண்ணெய் செய்துகொள்வோம். இதற்கு தேவையான பொருட்கள் : விளக்கெண்ணெய், சுத்தமான தேங்காய் எண்ணெய், மற்றும் பூண்டு. முதலில் பூண்டை தோல் உரித்து கேரட் சீவும் கட்டரில் சீவி எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது கண்ணாடி பௌல் ஒன்றை எடுத்து அதில் சீவி வைத்த பூண்டை போடுங்கள். தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் ஒரே அளவில் எடுத்துக் கொள்ளுங்கள் இரண்டையும் கண்ணாடி பெளில் உள்ள பூண்டுடன் சேர்த்து மூடுங்கள். இறுக்கமாக மூடி 7 தொடக்கம் 10 நாட்கள் வரை வெயிலில் வையுங்கள்.
வெயிலில் நன்றாக எண்ணெய், மற்றும் பூண்டு மிக்ஸ் ஆகிவிடும். இதனை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் விட்டுவிட்டு மெல்லிய ஷாம்பு பூசி குளியுங்கள். அவ்வளவு தான். உதிர்ந்த முடிகள் மீண்டும் முளைத்து முடி உதிர்வது நின்று விடும்..!