சமையல் குறிப்புகள்
குழந்தைகளுக்கு சத்தான ராகி லட்டு
தேவையான பொருட்கள் :
- கேழ்வரகு மாவு – அரை கப்
- தூளாக்கிய வெல்லம் – அரை கப்
- நெய் – 1 டேபிள் ஸ்பூன்
- முந்திரி பருப்பு – 5
- கருப்பு எள் – 1 டீஸ்பூன்
- உலர் திராட்சை – 1 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் தூள் – சிறிதளவு
- சுக்கு தூள் – அரை டீஸ்பூன்
செய்முறை:
- அகன்ற பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தூளாக்கிய வெல்லத்தை கொட்டி பாகு காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும்.
- வாணலியில் எள்ளை கொட்டி சிறு தீயில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
- நெய்யில் முந்திரி பருப்பு, உலர் திராட்சையை வறுத்துக்கொள்ளவும்.
- கேழ்வரகு மாவையும் வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும்.
- வறுத்த மாவுடன் வெல்ல பாகு, உலர் திராட்சை, எள், முந்திரி பருப்பு, ஏலக்காய் தூள், சுக்கு தூள் ஆகியவற்றை கொட்டி கிளறி இறக்கவும்.
- ஆறியதும் லட்டாக பிடித்து சுவைக்கவும்.