அழகு..அழகு..

பெண்களுக்கு பாத ‘மசாஜ்’

கால் பாதங்களை மசாஜ் செய்வதன் மூலம் ஏராளமான உடல்நல நன்மைகளை பெறலாம். தூங்க செல்வதற்கு முன்பு மசாஜ் செய்வது ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும். முதலில் கட்டை விரல் பகுதியை வட்ட வடிவத்தில் அழுத்தமாக தேய்க்க வேண்டும். பிறகு இரு கால்களின் கட்டை விரல்களையும் சில நிமிடங்கள் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

அதைத்தொடர்ந்து பாதத்தில் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை மிதமான சூட்டில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது நரம்புகளுக்கு இதமளிக்கும். தொடர்ந்து கால் பாதங்களை மசாஜ் செய்து வந்தால் கழுத்துவலி, தலைவலி, ஒற்றைத்தலைவலி, முதுகுவலி போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம். கழுத்துவலி பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் கால் விரல்களை சில நிமிடங்கள் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் வலி குறைய தொடங்கும். தலைவலி பிரச்சினைக்கு ஆளாகுபவர்கள் கால் பாதங்களில் உள்ள வர்ம புள்ளிகளை சரியாக அழுத்தினால் வலி நீங்கிவிடும்.



ரத்த ஓட்டம் சீராக நடைபெறவும் பாதங்களை மசாஜ் செய்து வருவது நல்லது. கால் பாதங்களில் எண்ணெய் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். கணுக்கால் பகுதிகளையும் மெதுவாக தடவி விட வேண்டும். இரு கால்களிலும் மாறி, மாறி சிறிதுநேரம் மசாஜ் செய்துவிடலாம். அது உடலில் ஆக்சிஜன் சீராக செல்வதற்கு வழிவகுக்கும். ரத்த நாளங்களும் சிறப்பாக செயல்படும். குறிப்பாக பெண்கள் பாதங்களை அவ்வப்போது மசாஜ் செய்து வருவது நல்லது. அது மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் அசவுகரியங்களை தவிர்க்க உதவும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் உதவும். இடுப்புவலி, முதுகுவலி பிரச்சினைகளுக்கும் நிவாரணம் தரும்.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker