இயற்கையான முறையில் பெண்களின் ஹார்மோன்களை சீராக்குவது எப்படி?
ஹார்மோன் சீரற்ற நிலையில் இருந்தால் மனரீதியாக உடல் ரீதியாக உணர்வுகள் ரீதியாக பிரச்சனைகள் வரும். சத்தான உணவுகளும் ஆரோக்கியமான வாழ்வியல் பழக்கமும் ஹார்மோன்களை சீராக இயங்க வைக்க உதவும்.
தேவையான புரோட்டீன் சத்து இருப்பது. ஒவ்வொரு முறை நீங்கள் சாப்பிடும் போது புரோட்டீன் சத்து இருக்கின்ற உணவுகளைக் கட்டாயம் உங்களது மெனுவில் சேர்த்துக்கொள்ளுங்கள். பசியின்மை பிரச்னையை நீக்க உதவும். பசி உணர்வை இயக்க வைக்கும். ஹார்மோனை சரிவர இயங்க செய்ய புரோட்டீன் சத்து உதவும். 20-30 கிராம் அளவு புரோட்டீன் சத்து ஒவ்வொரு முறையும் நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் இருக்க வேண்டும். அதிக பசி வந்து தொல்லை தராது. புரோட்டீன் சத்து இப்பிரச்னையை சீர் செய்யும்.
இன்சுலின் அளவை சீராக சுரக்க வைக்க உடற்பயிற்சி செய்து வருவது நல்லது. சர்க்கரை அமினோ ஆசிட்களை சரியான அளவில் வைத்து அதை எனர்ஜியாக மாற்ற உடற்பயிற்சி உதவும். 24 வாரங்கள் உடல் எடை அதிகம் உள்ள பெண்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்திருக்கின்றனர். அவர்களைப் பரிசோதித்ததில் இன்சுலின் சுரப்பு சீராக இருப்பதை ஆய்வில் கண்டுபிடித்தனர்.
இது உடலில் பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும். முக்கியமாக உடல்பருமனாகி ஹார்மோன் பிரச்னையை அதிகரிக்க செய்யும். இன்சுலின் சுரப்பை பாதிக்க செய்யும். பிசிஓடி பிசிஓஎஸ் உடல்பருமன் சர்க்கரை நோய் ப்ரீடயாபடிக் போன்ற நோய்கள் வருகின்றன.
ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் அதிகமாக தூண்டினால் கட்டுப்படுத்த முடியாத மன உளைச்சலால் பாதிப்போம். அவசரமான வாழ்வியலில் ஸ்ட்ரெஸ் அதிகரிக்கதான் செய்யும். ஆனால் அதைப் போக்க முயற்சிப்பதே நல்லது. ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாக சுரந்தால் உயர் ரத்த அழுத்தம் இதய துடிப்பு சீரற்ற நிலையில் இருப்பது கவலை பயம் போன்ற பாதிப்புகள் வரும். யோகா தியானம் உடற்பயிற்சி இசை போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது.
தேங்காய் நட்ஸ் தயிர் யோகர்ட் பால் விதைகள் செக்கில் தயாரித்த எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்பை மட்டுமே சாப்பிட வேண்டும். தேங்காயும் தேங்காய் எண்ணெயும் உடலுக்கு நல்லது. சருமத்துக்கு சிறந்தது. எண்ணெயில் மீண்டும் மீண்டும் பொரிக்கப்படும் உணவுகள் நல்லதல்ல. எண்ணெயை ஒருமுறை பயன்படுத்திய பின் மீண்டும் பயன்படுத்த கூடாது.
சிலர் எந்த நேரமும் சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். மூன்று வேளை உணவு இடையே நொறுக்கு தீனி என சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். இதனால் உடல்பருமனாகி ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும். மிக குறைவாக சாப்பிட்டால் போதுமான சத்துகள் கிடைக்காமல் போகும். ஒருநாளைக்கு 1200 கலோரிகள் கொண்ட உணவுகளை சாப்பிட்டால்தான் உடலுக்கு எனர்ஜி கிடைக்கும்.
காபி டீயில் கெஃபைன் அதிகம். இது உடல்நிலை மற்றும் மனநிலையைப் பாதிக்கும். இன்சுலின் அளவை சீராக சுரக்க வைப்பதில் மூலிகை டீ கிரீன் டீ குடிப்பது நல்லது. ஒரு நாளைக்கு 2 கப் அளவில் குடிப்பது உடலுக்கு ஏற்றது. சர்க்கரை நோயாளிகள் உடல்பருமனானவர்கள் மூலிகை டீ கிரீன் டீ குடிக்கும் பழக்கத்தில் இருக்க உடல்நலத்தில் முன்னேற்றம் தெரியும்.