சமையல் குறிப்புகள்

நார்ச்சத்து, புரதம் நிறைந்த மூங்க்லெட்

தேவையான பொருட்கள்

 • பாசிபருப்பு – 200 கிராம்
 • பச்சை மிளகாய் – 4
 • பேக்கிங் சோடா
 • எண்ணெய் – 1/2 தேக்கரண்டி
 • பெரிய வெங்காயம் – 1
 • தக்காளி – 1
 • குடைமிளகாய் – 1
 • கொத்தமல்லி இலை – சிறிதளவு
 • உப்பு – சுவைக்க
செய்முறை

 • பாசிப்பருப்பை நன்றாக கழுவி ஊறவைத்து நன்றாக ஊறியதும் தண்ணீர், உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
 • வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
 • அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் அரைத்து வைத்த மாவை ஊற்றி சுற்றி அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி தோசை போல் சுடவும்.
 • அதன் மேல் கலந்து வைத்த வெங்காயம், தக்காளி கலவையை தோசையின் மேல் தூவவும். தூவிய பின் லேசாக அழுத்தம் கொடுக்கவும்.
 • இரண்டு பக்கமும் திருப்பி போட்டு 5 நிமிடங்கள் வரை வேகவிடவும்.
 • அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.
 • ஆரோக்கியமான மற்றும் ருசியான மூங்க்லெட் தயார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker