சமையல் குறிப்புகள்
குழந்தைகளுக்கு சத்தான சிக்கன் சாண்ட்விச்
தேவையான பொருட்கள்
- சிக்கன் – 100 கிராம்
- உப்பு – தேவையான அளவு,
- மிளகாய்த்தூள் – தேவையான அளவு
- கோதுமை பிரெட் – 6
- தக்காளி சாஸ் – தேவையான அளவு
- பட்டர் – சிறிதளவு
- கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
- சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- உப்பு, மிளகாய்த்தூள் சிக்கனை சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
- பிரெட் ஒரு பக்கத்தில் தக்காளி சாஸ் தடவி அதன் மீது பட்டர் வைத்து சிக்கன், கொத்தமல்லித் தழை தூவி இன்னொரு பிரட் துண்டில் பட்டர் தடவி அதன் மேல் வைத்து சாப்பிடலாம்.
- சூப்பரான சிக்கன் சாண்ட்விச் ரெடி.