சமையல் குறிப்புகள்
சாமை மிளகு பொங்கல்
தேவையான பொருட்கள் :
- சாமை அரிசி – அரை கிலோ
- பாசிப் பருப்பு – 200 கிராம்
- இஞ்சி – 1 துண்டு (நறுக்கவும்)
- சீரகம் – 2 டீஸ்பூன்
- மிளகு – சிறிதளவு
- பெருங்காய தூள் – சிறிதளவு
- நெய், உப்பு – தேவைக்கு
செய்முறை:
- இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- அரிசியையும், பாசிப்பருப்பையும் நீரில் நன்றாக கழுவி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும்.
- வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் சீரகம், மிளகு, இஞ்சியை கொட்டி வறுத்தெடுக்கவும்.
- பின்னர் அதனுடன் வேகவைத்த சாமை சாதம், பெருங்காயதூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
- ருசியான சாமை மிளகு பொங்கல் தயார்.