தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

திருமணத்திற்கு பின் கருத்தரிப்பதற்கு தடையாக இருக்கும் விஷயங்கள் என்ன?

பொதுவாக திருமணமான பெண்கள் சந்திக்கும் சந்திக்கும் முக்கிய பிரச்சினையே கருத்தரிப்பதில் தான்.

ஏனெனில் சில பெண்கள் திருமணமான கொஞ்ச மாதங்களிலே கரித்தரித்து விடுவார். சிலர் பல மாதங்கள், வருடங்கள் கூட ஆகலாம்.

இவற்றைப் புரிந்து கொண்டு, அதில் மாற்றங்களை கொண்டு வந்தால் நிச்சயம் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதைத் தவிர்க்கலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

குறைவான தூக்கம்

தினமும் சரியாக தூங்காமல் இருந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது குறைந்துவிடும். இப்படி உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது குறைவாக இருந்தாலும், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும்.

நோயெதிர்ப்பு சக்தியானது குறைவாக இருப்பதால், நோய்த்தொற்றுகள் அதிகம் ஏற்படும். இதனால் இனப்பெருக்க மண்டலமும் பாதிப்படைந்து கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படக்கூடும்.

அளவுக்கு குறைவான எடை

பெண்கள் அளவுக்கு அதிகமாக அல்லது அளவுக்கு குறைவான எடையுடன் இருந்தால், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும். எனவே அவ்வப்போது உடல் எடையை பார்ப்பதுடன், அதனைப் பராமரிக்கவும் செய்ய வேண்டும்.

ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவு

ஈறுகளை தாக்கியுள்ள கிருமிகளானது உடலினுள் சென்று, இனப்பெருக்க மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, கருத்தரிப்பதில் பிரச்சனையை ஏற்படுகிறது.

எனவே பெண்கள் ஈறுகளில் பிரச்சனை இருந்தால், அதனை சாதாரணமாக எண்ணாமல் மருத்துவரை சந்தித்து போதிய ஆலோசனையைப் பெற்று பின்பற்றுங்கள்.

பிசிஓஎஸ் பிரச்சனை

பிசிஓஎஸ் பிரச்சனை இருந்தால் கருத்தரிப்பதே மிகவும் கடினமாகிவிடும். ஏனெனில் இந்த பிரச்சனை வந்தால், ஓவுலேசனானது சரியாக நடைபெறாமல் போவதோடு, கருப்பையில் கருமுட்டை தங்காமல் போய்விடும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker