சமையல் குறிப்புகள்
அருமையான காளான் முட்டை மசாலா
தேவையான பொருட்கள்
- காளான் – ஒரு கப்
- பெரிய வெங்காயம் – ஒன்று
- முட்டை – ஒன்று
- பட்டை – ஒன்று
- தனியா தூள் – ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- கிராம்பு – 2
- தக்காளி – ஒன்று
- சோம்பு – அரை தேக்கரண்டி
- பூண்டு – 2 பல்
- கொத்தமல்லி – சிறிதளவு
- உப்பு – தேவைக்கேற்ப
- எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை :
- பெரிய வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- காளானை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
- பூண்டினை தோலுரித்துக் சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு மற்றும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் அதில் பூண்டு மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்..
- தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
- மசாலா பச்சை வாசனை போனவுடன் பின்னர் மஷ்ரூம் போட்டு லேசாக வதக்கவும்.
- காளான் நன்கு வெந்த பின்பு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி விட்டு 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
- சுவையான காளான் முட்டை மசாலா தயார்.
- இதை சாதத்துடனும் சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிடலாம்.