சமையல் குறிப்புகள்

அருமையான காளான் முட்டை மசாலா

தேவையான பொருட்கள்

  • காளான் – ஒரு கப்
  • பெரிய வெங்காயம் – ஒன்று
  • முட்டை – ஒன்று
  • பட்டை – ஒன்று
  • தனியா தூள் – ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
  • கிராம்பு – 2
  • தக்காளி – ஒன்று
  • சோம்பு – அரை தேக்கரண்டி
  • பூண்டு – 2 பல்
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • உப்பு – தேவைக்கேற்ப
  • எண்ணெய் – தேவைக்கேற்ப




செய்முறை :

  • பெரிய வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • காளானை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  • பூண்டினை தோலுரித்துக் சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு மற்றும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் அதில் பூண்டு மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்..
  • தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  • மசாலா பச்சை வாசனை போனவுடன் பின்னர் மஷ்ரூம் போட்டு லேசாக வதக்கவும்.
  • காளான் நன்கு வெந்த பின்பு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி விட்டு 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
  • சுவையான காளான் முட்டை மசாலா தயார்.
  • இதை சாதத்துடனும் சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிடலாம்.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker