ஆரோக்கியம்மருத்துவம்

முறையற்ற மாதவிடாய் தோன்ற என்ன காரணம்?

பெண்களுக்கு பூப்பெய்திய காலத்தில் இருந்து 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் தோன்ற வேண்டும். ஆரம்ப காலங்களில் (13 வயதில் இருந்து 19 வயது வரை) சுழற்சி சீராகவில்லை என்றால், மிகவும் கவலைப்படத் தேவை இல்லை. போகப் போக சரியாகி விடும். 14 நாட்கள் ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோனும்; பின் 14 நாட்கள் ப்ரோஜெஸ்ட்ரோன் என்ற ஹார்மோனும் சுரக்கும். அதன் பின்னர் மாதவிடாய் 3 நாட்களுக்கு அதிகமாகவும், மேலும் இரண்டு நாட்களுக்கு நீடித்து, மொத்தம் ஐந்து நாட்களுக்கு உதிரப்போக்கு இருக்கும்.



ஆரம்பித்த நாளில் இருந்து 28 நாட்கள் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு சிலருக்கு முன்னும் பின்னும் இருக்கும். 21 நாட்கள் முதல் 35 நாட்கள் வரை மாறி இருப்பது சாதாரணமானது. நீங்கள் கவலை கொள்ளத் தேவை இல்லை. ஒரு சிலருக்கு இந்த சுழற்சி, 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்று இருந்தால், நிச்சயம் அதை சீராக்க வேண்டும். அப்போதுதான் வரும் நாட்களில் உடலில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்கும்.

முறையற்ற மாதவிடாய் தோன்ற காரணங்களை முதலில் பார்க்கலாம்.

காரணம் 1: மன அழுத்தம்

10, 12 வகுப்புகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற மன அழுத்தம் அதிகம் இருப்பதால் முறையற்ற மாதவிடாய் தோன்றுகிறது. சில குழந்தைகள் ஒரே இடத்தில் அமர்ந்து படிப்பதால், உடல் எடை அதிகரித்துக்கொண்டே போகும். ஒரு சில குழந்தைகளுக்கு படிப்பில் அதிக ஆர்வம் உள்ளதால், சரியான உணவு சாப்பிடாமல் உடல் மெலிந்து சக்தி இல்லாமல் போய்விடுவார்கள். இந்த இரண்டு வகை மாணவர்களுக்கும் மாதவிடாய் சுழற்சியில் கோளாறு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இப்படி, அதிக எடை கொழுப்புச்சத்து இருந்தாலும், குறைவான எடை சத்துக்குறைபாடு இருந்தாலும், கருமுட்டை கர்ப்பப்பைக்கு வருவதில் தடை ஏற்பட்டு, முறையற்ற மாதவிடாய் (menstruation) சுழற்சி ஏற்படும்.

காரணம் 2 : பிரசவத்திற்கு பின்

சில பெண்களுக்கு குழந்தைப்பேருக்கு பின்னர் சீரான மாதவிடாய் வருவதில்லை. நல்ல உணவு சாப்பிட வேண்டும் என்று, அதிக கொழுப்பு உள்ள உணவை சாப்பிடுவதால் இந்தப் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள்.

காரணம் 3: தைராய்டு பிரச்சனை

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், உடல் எடையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்; மேலும் சோர்வாக உணர்வார்கள். இவர்களுக்கும், மாதவிடாய் சுழற்சி சீராக இருக்காது.

காரணம் 4: மெனோபாஸ்

நாற்பது வயதை நெருங்கும் பெண்களுக்கு, மெனோபாஸ் வரப்போகும் காரணங்களினால், முறையற்ற மாதவிடாய் சுழற்சி இருக்கும். அது சாதாரணமானதுதான். ஆனால், அதிக உதிரப்போக்கு இருந்தால் பிரச்சனை.

காரணம் 5: ஹார்மோன் பிரச்சனைகள்

ஹார்மோன் சரியாக சுரக்காத காரணத்தினால், பிசிஓஎஸ் போன்ற நோய்கள் ஏற்பட்டு மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை ஏற்படுத்தும்.

காரணம் 6: செயலற்று இருப்பது

உடல் உழைப்பு இல்லாமல் செயலற்று இருந்தால், நிச்சயம் உடலில் பிரச்சனைகள் மெதுமெதுவாக ஆரம்பமாகும். அறுவை சிகிச்சைக்குப்பின் நடமாடுவதை குறைத்துக் கொள்வார்கள். படிக்க வேண்டும் என்ற தருணங்களில், இப்படி தவிர்க்க முடியாத காரணங்களினால் செயலற்று இருப்பது.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker