சமையல் குறிப்புகள்

சுவையான வெண்டைக்காய் முட்டை பொடிமாஸ்

தேவையான பொருட்கள்:

 • முட்டை – 4
 • வெண்டைக்காய் – 100 கிராம்
 • வெங்காயம் – 1
 • பச்சை மிளகாய் – 2
 • மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
 • எண்ணெய், உப்பு – சுவைக்கு

 செய்முறை:

 • வெண்டைக்காயை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
 • வெண்டைக்காயின் பச்சை வாசனை போகும்வரை வதக்கியதும் தனியாக வைக்கவும்.
 • வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
 • வெங்காயம் நன்றாக வதங்கியதும், வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.
 • அதனுடன், முட்டையை உடைத்து ஊற்றி வேகவிடவும்.
 • முட்டையும், வெண்டைக்காயும் வெந்ததும் இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
 • சுவையான வெண்டைக்காய் முட்டை பொடிமாஸ் ரெடி..!Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker