சமையல் குறிப்புகள்
சுவையான ஓட்ஸ் லட்டு
தேவையான பொருள்கள் :
- ஓட்ஸ் – 200 கிராம்
- சர்க்கரை ( சீனி ) – 100 கிராம்
- முந்திரிப் பருப்பு – 10
- நெய் – 4 மேஜைக்கரண்டி
- மஞ்சள் புட்கலர் – 1/4 தேக்கரண்டி
- வெந்நீர் – தேவையான அளவு
செய்முறை :
- அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் ஓட்ஸ், முந்திரிப்பருப்பு சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.
- ஆறிய பின் மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும். சர்க்கரையை தனியாக மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும். புட்கலரை ஒரு மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் திரித்து வைத்துள்ள ஓட்ஸ் முந்திரிப்பருப்பு தூள், சர்க்கரைத் தூள், நெய், புட்கலரை கரைத்து வைத்துள்ள தண்ணீர் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
- லட்டு பிடிக்கும் பதத்திற்கு வெந்நீரை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும். பதம் சரியாக வந்தவுடன் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
- சுவையான ஓட்ஸ் லட்டு ரெடி.