ஆரோக்கியம்

ஜிம் போகாமல், உடம்பை ஃபிட்டா வச்சுக்க சூப்பர் வழிகள்

உடம்பை ஒல்லியாக்க, சிக்ஸ் பேக் வைத்து தசை அதிகம் பெற ஜிம்மில் நிச்சயம் உறுப்பினர் ஆக வேண்டும். ஆனால் உடம்பை ஃபிட்டாக வைத்திருக்க ஜிம் தேவையில்லை. இதற்கான சில வழிமுறைகளை இங்கே காணலாம்.

மிக எளிதாக செய்யக்கூடிய அற்புத பலன் தரும் உடற்பயிற்சி. இதற்கு எந்தவொரு உபகரணங்களும், ஸ்பெஷல் ஷூக்களும், ஆடைகளும் தேவையில்லை. ஒரு தூய்மையான தரையில், படுக்கை விரிப்பு இருந்தால் மட்டும் போதும். யோகா செய்வதற்கு கைதேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில்லை. எளிய செய்முறைகளை பின்பற்றினாலே போதும். புத்தகங்கள் அல்லது ஆன்லைன் வீடியோக்கள் மூலம் பாடி ஸ்டெரெச்சிங், எளிய அசைவுகள் மட்டும் கற்றுக் கொண்டால் போதுமானது. ஆன்லைனில் இலவச யோகா வகுப்புகளும் இருக்கின்றன. இதனை நீங்கள் ஓய்வாக இருக்கும் தருணங்களில் கற்றுக் கொள்ளலாம். யோகா மூலம் உடல் இலகுத்தன்மை பெற்று, தசைகள் வலிமை பெறுகின்றன.



உங்கள் உடல் எடையைக் கொண்டே உடற்பயிற்சியில் ஈடுபடுவது பாடி வெயிட் டிரைனிங் அல்லது கலிஸ்தெனிக்ஸ் என்று பெயர். இதன்மூலம் ஓரளவு உடல் வலிமையைப் பெறலாம். இதற்காக சில உடற்பயிற்சிகளை நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். லஞ்சஸ், ஸ்குவாட்டிங், புஷ்-அப்ஸ், புல்-அப்ஸ், சின்-அப்ஸ், செஸ்ட்-அப்ஸ், டிரைசெப்ஸ்-டிப்ஸ் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம். இதனை எந்தவொரு உபகரணங்களும் இன்றி, உடல் எடைக் கொண்டே செய்யலாம்.

நீண்ட தூர நடைபயிற்சி அல்லது ஜாக்கிங் என்பது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் பயிற்சி. நீண்ட நேரம் அமர்ந்திருக்கக் கூடிய, உடலை அதிகம் பயன்படுத்தாத வேலைகள் செய்பவருக்கு இந்த பயிற்சி உதவியாக இருக்கும். நாள் முழுவதும் நகராமல் பணி செய்யும் நபர்கள், நீண்ட தூரம் வாக்கிங் அல்லது ஜாக்கிங் செல்ல வேண்டும். இது போதிய கலோரிகளை எரிக்கின்றனவா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உடல் மூட்டு இணைப்புகள் ஆரோக்கிய நிலையில் இருக்கிறதா என்று அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

உடல் வலிமை, சுறுசுறுப்பு உள்ளிட்டவற்றை பெற ஸ்கிப்பிங் மிக உதவியாக இருக்கும். தொழில்முறை குத்துச்சண்டை வீரர்கள் நாள்தோறும் ஸ்கிப்பிங் செய்வதைக் கண்டிருப்பீர். இது உடலிற்கு மிகுந்த சுறுசுறுப்பை அளிக்கும். மேலும் இதய துடிப்பை அதிகரிக்கச் செய்து, அதிக கலோரிகளை எரிக்கிறது.

படி ஏறுதல் மிக சிரமமான ஒன்று தான். எலிவேட்டர், லிப்ட் இருந்தால் அதனை பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்வீர். ஆனால் உடல் வேலைகள் அதிகம் இல்லாத நபர்கள் படி ஏறுவது நல்ல பலனை அளிக்கும். இது இதய துடிப்பை அதிகரிக்கச் செய்து, அதிக கலோரிகளை எரிக்கிறது.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker