சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பும் முட்டை சாப்ஸ்

தேவையான பொருட்கள் :

  • முட்டை – 5
  • ப.மிளகாய் – 3 (நறுக்கவும்)
  • கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு
  • சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
  • பிரெட் தூள் – 1 கப்
  • எண்ணெய், உப்பு – தேவைக்கு



செய்முறை:

  • கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • முட்டைகளை நன்றாக வேகவைத்து ஓட்டை நீக்கி விட்டு நீளவாக்கில் இரண்டாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
  • அகன்ற பாத்திரத்தில் சோள மாவை கொட்டி அதனுடன் கொத்தமல்லி தழை, ப.மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
  • பின்பு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • முட்டை துண்டுகளை சோள மாவு கலவையில் முக்கி பின்பு பிரெட் தூளில் புரட்டி வைத்துக்கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி அது கொதிக்க தொடங்கியதும் முட்டை கலவையை போட்டு பொரித்தெடுக்கவும்.
  • சுவையான முட்டை சாப்ஸ் தயார்.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker