தாய்மை-குழந்தை பராமரிப்பு

குழந்தை வளர்ப்பில் தாயும் தந்தையும் பின்பற்ற வேண்டியவை

குழந்தை வளர்ப்பில் தாயானவள் கட்டாயமாக இருப்பார். ஆனால், பெரும்பாலும் தந்தையானவர் இதில் இணையாமல் இருக்கிறார். தந்தையும் குழந்தை வளர்ப்பில் ஈடுபட வேண்டும். குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான சில கடமைகள் தந்தைக்கு உள்ளன. அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு பின்பற்றினால் வாழ்க்கை சுகம். சமூகத்துக்கு நல்ல குழந்தையை கொடுக்கலாம்.

* குழந்தைக்கு எப்போது எவர்சில்வர் பாத்திரங்கள், தட்டுகளில் உணவைக் கொடுத்து பழக்க வேண்டும்.

* தண்ணீர் பாட்டிலும் ஸ்டீல் அல்லது காப்பரில் வாங்கலாம்.

* வாய் சிறிதாக உள்ள பாட்டிலை வாங்குவது நல்லது.

* பணிக்கு செல்லும் பெற்றோர் ஞாயிற்றுகிழமையாவது முழு நேரத்தையும் குழந்தையிடம் செலவிட வேண்டும்.* வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது நல்லது. பாதுகாப்பும்கூட.

* பஸ், வேன்களில் நீண்ட தூரம் குழந்தை பயணம் செய்தால், முதுகுத்தண்டுவடம் சார்ந்த பிரச்னைகள் வரக்கூடும்.

* குழந்தையை படி, படி என அடிக்கடி கட்டாயப்படுத்தாமல், புரியும்படி சொல்வது நல்லது. விளையாட்டும் படிப்பும் இரண்டுமே குழந்தைக்கு இருப்பது நல்லது.

* ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறன் இருக்கும். அந்த தனித்துவ திறனை கண்டுபிடிக்க முயலுங்கள்.

* பிடிக்காத விஷயத்தை செய்ய சொல்லி குழந்தையை வற்புறுத்த கூடாது.

* டிவி, மொபைல் விளையாட்டுகளைவிட உடலுழைப்பு தரும் விளையாட்டுகளை விளையாட குழந்தையை ஊக்குவியுங்கள்.

* அன்றாடம் தாயும் தந்தையும் காலை முதல் இரவு வரை என்ன நடந்தது எனக் குழந்தைகளிடம் தினமும் கேட்க வேண்டும். ஏனெனில் காலம் மிகவும் மோசமாக இருப்பதால் குழந்தையைப் பாதுகாப்பது பெற்றோரின் கடமை.

குழந்தை என்ன நடந்தாலும் தாய், தந்தையரிடம் பயம் இல்லாமல் சொல்லும் அளவுக்கு உங்களது வளர்ப்புமுறை இருந்தால் எல்லாக் குழந்தைகளும் பாதுகாப்புடன் இருக்கும். குழந்தையின் பாதுகாப்பு பெற்றோர் கையிலே.

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker