ஆரோக்கியம்மருத்துவம்

கர்ப்பகாலத்தின் 7-9 மாதங்களில் ஏற்படும் மாற்றங்கள்..

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சில மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமான ஒரு நிகழ்வு தான். கர்ப்ப காலத்தின் முதலாம் மற்றும் இரண்டாவது பருவ காலத்தில் பெண்களுக்கு காலை நேர காய்ச்சல், தூக்கமில்லாத இரவுகள், மார்பக வளர்ச்சி போன்ற மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு தான். இருந்தாலும் இந்த மாற்றங்களை முதல் முறையாக ஒரு பெண் கடக்கும் போது அவளுக்கு ஆச்சரியமாக தான் இருக்கும்.

அதே போல ஒரு பெண்ணின் கர்ப்பத்தின் மூன்றாம் பருவ காலமான ஏழு முதல் ஒன்பது மாதங்கள் வரை ஏற்படும் ஆச்சரியமூட்டும் சில மாற்றங்கள் என்னென்ன என்பதை இந்த பகுதியில் காணலாம்.1. பெண்களின் கர்ப்பத்தின் மூன்றாம் பருவகாலத்தில் அவர்களது கால் நரம்புகள் வெளியே தெரிய ஆரம்பிக்கின்றன. இது பல காரணங்களால் ஏற்படுகிறது. உடல் எடை அதிகரிப்பு, கர்ப்பப்பை வளர்ச்சி ஆகியவை இதற்கு காரணமாக இருக்கிறது.

2. உங்கள் கருப்பை மற்றும் இடுப்புப் பிரசவத்திற்கு தயாராவதற்குத் தொடங்குகையில், உங்கள் உட்புறத் தசைநார்கள் நீட்டிக்க தொடங்குகின்றன. இந்த செயல்முறையானது, சிலருக்கு வலிமிக்கதாக இருக்கலாம், இது உங்கள் இடுப்பு சுற்றியுள்ள தசைநாளங்களைத் தளர்த்தும் ரிலக்ஸின் என்று அழைக்கப்படும் ஹார்மோன் மூலமாக நடைபெறுகிறது.

3. கர்ப்பினி பெண்கள் தங்களது மூன்றாவது பருவ காலத்தில் குரல் மாற்றத்தை சந்திக்கின்றனர். குரல் வலைகளின் திரவங்கள் மற்றும் சிறிய அளவு வீக்கத்தின் காரணமாக அவர்கள் குறைவான குரல் ஒலியை பெறுகின்றனர்.

4. நீங்கள் இனிமேல் மார்பங்கள் வளராது என நினைத்துக்கொண்டிருக்கும் போது அவை மேலும் அதிகமாக இந்த மூன்றாவது பருவ காலத்தில் வளர்ந்து உங்களுக்கு ஆச்சரியமூட்டும். இதனால் சிலருக்கு அவர்களது உடல் எடையும் கூட அதிகரிக்கும்.

5. மூன்றாவது பருவ காலத்தில் பெண்களின் மார்பங்கள் வளர்வது மட்டுமில்லாமல் குழந்தைக்கு பால் ஊட்டவும் தயாராகிறது. எனவே மார்பங்களில் மஞ்சள் நிற திரவம் வெளியேறுகிறது.6. இந்த காலகட்டத்தில் குழந்தையின் குறுத்தெலும்பு வளரும் எனவே அதற்கு தேவையான கால்சியத்தை குழந்தை தனது அம்மாவிடம் இருந்து பெற்று வளரும். இதனால் தாய்க்கு கால்சியம் குறைபாடு உண்டாகும்.

7. இது தாயின் பிரசவம் நெருங்கும் சமயம் என்பதால், பிரசவம் சார்ந்த கனவுகள் தாய்க்கு அதிகமாக வரும். சில விளையாட்டான நகைச்சுவையான கனவுகள் வருவதாக பலர் தெரிவித்துள்ளனர்.

8. ஏழு முதல் ஒன்பது மாதங்களில் பெண்களுக்கு வயிறு வேகமாக வளரும். பெண்கள் தங்களது கடைசி பருவ காலத்தில் வாரத்திற்கு அரை பவுண்டு முதல் ஒரு பவுண்ட் வரை எடை கூடுகின்றனர். இது அவர்களுக்கு நீச்சயமாக ஆச்சரியமூட்டும் ஒரு விஷயமாகும்.

9. மூன்றாம் பருவ காலத்தில் அவர்களது வயிற்றின் வளர்ச்சியால் அவர்களால் எப்போதும் போல சாதரணமாக நடக்க முடியாது. எனவே அவர்கள் இடுப்பில் கை வைத்துக்கொண்டு தான் நடப்பார்கள்.10. வயிற்றின் அளவு மட்டும் இந்த காலகட்டத்தில் மாறுபடுவதில்லை. பெண்களது கருவிழிகளின் வடிவமும் மாறுபடுகிறது. இதனால் தற்காலிகமாக பார்வை சற்று மங்கலாக இருக்கும்.

11. கர்ப்பப்பை நரம்புகள் மீது வளர்ந்துவிடுவதால் இந்த காலகட்டத்தில் நரம்புகளில் வலி உண்டாவது இயல்பான ஒரு மாற்றம் தான். இது அதிஷ்டவசமாக குழந்தை பிறந்த உடன் சரியாகிவிடும்.

12. பெண்கள் இந்த மூன்றாவது பருவ காலத்தில் 20 சதவீதம் அதிகமாக ஆக்ஸிஜனை சுவாசிக்கின்றனர். இதனால் அவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. அது மட்டுமில்லாமல் கர்பப்பையின் வளர்ச்சியால் நுரையிரல் சற்று சுருங்குகிறது.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker