அதிக நேரம் தூங்கினால் பக்கவாத நோய் வருமா?
தினமும் இரவு தூக்கம் 9 மணி நேரத்திற்கு மேல் நீடித்தால் ஆயுள் காலம் குறையும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. அதேபோல் பகலில் நீண்ட நேரம் தூங்கினாலும் பக்கவாதம் வரும் வாய்ப்பு 85 சதவீதம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள ஹுவாஸோங் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில் 31,750 பேரை ஈடுபடுத்தியுள்ளது. 62 வயது முதியவர்களை வைத்தே இந்த ஆய்வை நிகழ்த்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு கடந்த 6 வருடங்களாகவே இரவு ஒன்பது மணி நேரத்திற்கு மேல் தூங்கும் பழக்கம் இருந்துள்ளது. இளமை தொடங்கி முதுமை வரை எந்த பக்கவாத அறிகுறிகளும் அவர்களுக்கு இல்லை. ஆனால் இந்த 9 மணி நேரத்திற்கு மேலாக தூங்கும் பழக்கம் தொடங்கிய நாளிலிருந்து பக்கவாதம் வரும் அறிகுறி தென்பட்டுள்ளது.
அதேபோல் பகலில் 90 நிமிடங்களுக்கு மேல் தூங்கும் பழக்கம் இருந்தாலும் அவர்களுக்கு உடனே இல்லாவிட்டாலும் நீண்ட நாள் கழித்து பக்கவாதம் வரும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆய்வில் முதியவர்கள் சரியாக தூங்காவிட்டாலும் அவர்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு உள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
எனவே ஆரோக்கியமான தூக்க நேரம் என்பது சரியாக ஒன்பது அல்லது எட்டு அல்லது ஏழு மணி நேரம் என்று குறிப்பிட்டுள்ளது. இறுதியாக, இந்த ஆய்வு முடிவு முதியவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து வயதினரும் ஆரோக்கியமான தூக்க நேரத்தை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தூங்கச் செல்வதற்கு முன் நான் கண்டிப்பாக சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். அப்படி கடைபிடித்தால் உடல் நலம் சீராகும். கட்டாயமாக தூங்க செல்வதற்கு முன் தண்ணீர் குடிக்கக் கூடாது. தூங்குவதற்கு முன் குட்டித்தூக்கம் போடவோ கூடாது. தூங்குவதற்கு முன் செல்போன், கணினி முதலியவற்றை பயன்படுத்தக் கூடாது.
இரவு தூங்க செல்வதற்கு முன் காபி, டீ முதலியவற்றை குடிக்கக் கூடாது. குப்புற படுப்பது, மல்லாக்க படுப்பதோ கூடாது. ஒரு சாய்க்க படுத்தால் உடலுக்கு மிகவும் நல்லது. இதய துடிப்பும் நன்றாக வேலை செய்யும். மன நிம்மதியும், நல்ல எண்ணங்களும் நிம்மதியான தூக்கத்தை தரும்.
தூங்க செல்வதற்கு முன் அதிக, திடமான உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வாழைப்பழம் சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும். குறைந்தபட்சம் 8 மணிநேரம் தூங்குவது உடலுக்கு மிகவும் நல்லது. நல்ல எண்ணங்கள் மற்றும் மன நிம்மதி தரும் தூக்கம். தூங்க செல்வதற்கு முன் இதெல்லாம் கடைபிடியுங்கள்.