ஃபேஷன்

எடுப்பான தோற்றத்துடன் அணிவதற்கு சுகமளிக்கும் ஆடவர் ஜீன்ஸ் மற்றும் டிரவுசர்கள்

எந்த வயதினருக்கும் ஏற்ற உடையாக இருக்கிறது ஜீன்ஸ். சிறிய குழந்தை முதல் வயதான பெரியவர் வரை இப்போது ஜீன்ஸ் பேண்ட் உடன் வலம் வருவதை பார்க்க முடிகிறது. அதுவும் ஸ்ட்ரெட்ச் என சொல்லப்படும் நெகிழும் தன்மை உடைய ஜீன்ஸ் துணியால் தைக்கப்பட்ட ஜீன்ஸ் பேண்ட் எல்லோர் மனதையும் கவரும் வண்ணம் உள்ளது.

இதில் ஸ்லிம் ஃபிட், கம்போர்ட் ஃபிட், ஃபேஷன் ஃபிட் என மூன்று வகைகளில் ஜீன்ஸ் பேண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த மூன்று வகை ஜீன்ஸ்களுடன் தரமான காட்டன் மற்றும் டெரி உள்ளன் எனப்படும் ட்ரையான் துணிகளை கொண்டு ஆண்களுக்கான பேண்ட்களை 2005 முதல் தயாரித்து வருகிறது அட்லீயர் நிறுவனம். இந்த நிறுவனம் தயாரிக்கும் ஆண்களுக்கான பிரத்தியேகமான ஜீன்ஸ் மற்றும் காட்டன் பேண்ட்கள் ரூபாய் 700 லிருந்து 1300 வரை விற்கப்படுகிறது.



இவர்கள் தயாரிக்கும் துணிகளின் தரம் மற்றும் காலத்திற்கேற்ற வடிவமைப்பு மக்களை பெரிதும் கவர்ந்து உள்ளதால் தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா என நான்கு மாநிலங்களிலும் பெரிய ஜவுளி விற்பனை கூடங்களில் இருந்து சிறிய ஜவுளி விற்பனை கூடங்கள் வரை இவர்களது பிராண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளியை முன்னிட்டு புதிய வகை மாடல்களை இவர்கள் அறிமுகப்படுத்தி இருப்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டும்.

ஆடை அணிவதற்கு சுகமாகவும் தோற்றத்திற்கு மிடுக்காகவும் இருக்கவேண்டுமென்றால் துணியின் தரம் மற்றும் தையலின் தரமும் வடிவமைப்பும் முக்கிய இடம் பெறுகின்றன. இவற்றுடன் மக்கள் வாங்கும் விலையில் இருக்க வேண்டும் என்பதே எங்கள் தயாரிப்பின் முக்கிய நோக்கம் என்கிறார் இத்துணி வகைகளை தயாரிக்கும் ஹீநாத் மார்க்ககெட்டிங் நிறுவனத்தின் உரிமையாளர் ரித்தேஷ் அவர்கள். பெஸ்ட் பிராண்ட் நிறுவனம் இவர்களின் ஆடைகளை சந்தைப்படுத்தி வருகிறது.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker