உறவுகளில் பிரிவில் இருந்து விடுபடுவது எப்படி?
உறவுகளில் முறிவு, பிரிவு என்பது இன்றைய கால சூழ்நிலையில் கூடிக் கொண்டுதான் வருகின்றது. இது ஒருவரின் வாழ்வில் சுனாமி காலம் என்றே சொல்லலாம். அதுவும் தவறே செய்யாதவர் பாதிக்கப்படும் பொழுதோ ஏமாற்றப்படும் பொழுதோ அவரின் மனம் தூளாய் உடைந்து விடுகிறது. இவர்களின் வாழ்வு அவ்வாறு ஆகி விடக் கூடாது. இதிலிருந்து அவர்கள் மீள வேண்டும். அதற்கான சில வழிகள் அறிவுறுத்தப்படுகின்றன. அவை
* உறவின் பிரிவினைப் பற்றி யோசித்து முடிவு எடுங்கள். பின் அதில் உறுதியாய் இருக்க வேண்டும். இல்லையெனில் மனம் அதில் அதிக உளைச்சல் அடையும்.
* பிரிந்தவரும், நீங்களும் சென்ற பொதுவான இடங்கள் செல்வதை சிறிது காலம் தவிர்த்து விடுங்கள். மனம் பழையதை நினைத்து அசை போட இடம் கொடுக்கக் கூடாது.
* நிகழ்ந்ததை, பிரிவினையை சரி, நிகழ்ந்து விட்டது என்பதனை ஏற்றுக் கொள்ளுங்கள்.
* சோகமான, கடினமான, கசப்பான நிகழ்வுகள் எல்லோர் வாழ்க்கையிலும் உண்டு என்பதனை அனைவரும் உணர வேண்டும்.
* நல்ல நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள்.
* இந்த முறிவு உங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது போன்ற வெளித் தோற்றமோ அல்லது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற வெளித் தோற்றமோ வேண்டாம். இயற்கையாக இருங்கள்.
* எத்தனை முயற்சிக்குப் பிறகும் ஒன்றும் நடக்கவில்லை என்றால் அந்த உண்மையினை ஏற்றுக் கொள்ளுங்கள்.
* இசை கேளுங்கள்.
* புதிதாக ஏதாவது ஒன்று பயிலுங்கள். இசை, இசை கருவி, மொழி இப்படி ஏதாவது ஒன்று பயிலுங்கள்.
* ஆக ஒடிந்து விழுவது வாழ்க்கையல்ல. நிமிர்ந்து வாழ்ந்து காட்டுவது தான் வாழ்க்கை. இந்த வாழ்க்கை தான் மன ஆரோக்கியத்தினை அளிக்கும்.