அழகு..அழகு..

அழகான ஆபரணம்.. ஆனந்தமான அனுபவம்..

பெண்களின் ஆபரண ஆசைகள் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் விதவிதமான ஆபரணங்களை நிறைய அணிவது பேஷனாக இருந்தது. தற்போது ‘குறைவான (அளவு) ஆபரணங்கள், நிறைவான அழகு’ என்பது டீன் ஏஜ் பெண்களின் விருப்பமாக இருக்கிறது. அதில் ட்ரென்ட்டாக இருக்கும் விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்!

செமிபிரேஷியஸ் ஸ்டோன்களில் தயாரிக்கப்பட்ட லேயர்டு கழுத்து ஆபரணங்கள் எல்லா காலத்திற்கும் ஏற்றதாக இருக்கின்றன. 30 முதல் 50 வயது பெண்கள் இதனை விரும்பி வாங்குகிறார்கள்.



1990-ம் ஆண்டுகளில் சோக்கர் நெக்லஸ்கள் பெண்களுக்கு மிகவும் பிடித்தமானவை களாக இருந்தன. அவை இப்போது வடிவத்தையும், அளவையும் மாற்றிக்கொண்டு புதுவிதமாக பவனி வருகின்றன. விருந்துக்கான உடைகளையும், மணப்பெண்களுக்கான உடைகளையும் அணிகிறவர்கள் இந்த புத்தம் புதிய சோக்கர் நெக்லஸ்களை ஆர்வமாக வாங்குகிறார்கள்.

லேயர்டு குந்தன் நெக்லஸ் அணியும்போது அதற்கு ஏற்ற நீள கம்மல்களை இளம்பெண்கள் விரும்பி அணிவதுண்டு. அதற்கு இப்போதும் மவுசு இருந்துகொண்டிருக்கிறது. டிரடீஷனல்- கண்டம்பரரி பேஷன் ஆடைகள் அணியும்போது இந்த நீள கம்மல்கள் கூடுதல் அழகுதரும்.

வயது வித்தியாசமின்றி அனைவருமே தற்போது டெம்பிள் ஜூவல்லரியை அணிந்து அழகில் ஜொலிக்கிறார்கள். திருமணம், விருந்து, விழாக்களில் பாரம்பரிய தோற்றத்தை தந்து இது பெண்களை ரசிக்கச்செய்கிறது.



அதிக பணம் செலவு செய்யாமல் ஆபரணங்கள் மூலம் மக்களை கவர விரும்புகிறவர்கள் ஸ்வரோஸ்கி கிறிஸ்டல் ஆபரணங்களை தேர்ந்தெடுக்கிறார்கள். இது நிறம் மங்காமல் எப்போதும் ஜொலிப்புதரும். எல்லாவிதமான சுப நிகழ்வுகளுக்கும் இதனை அணிந்துசெல்லலாம்.

மணப்பெண்கள் முகூர்த்தத்திற்கு பின்பு சிம்பிளான உடைகளில் நேர்த்தியாக உலாவர விரும்புவார்கள். அதற்கு ரோஸ் கோல்டு ஆபரணங்கள் ஏற்றதாக இருக்கும். குறைந்த அளவு ஆபரணங்கள் அணிந்து நிறைந்த அழகுடன் திகழவிரும்பும் புதுப்பெண்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ஆபரணங்கள் பேஸ்டல் நிற உடை களுக்கு கூடுதல் அழகுதரும்.

அலுவலகம் செல்பவர்கள், இண்டர்வியூக்கு போகிறவர்கள், கார்ப்பரேட் மீட்டிங்களுக்கு செல்கிறவர்கள் முகத்திற்கும், உடைக்கும் பொருத்தமான சிம்பிளான ஆபரணங்களை பயன்படுத்துவது நல்லது. இளம் மஞ்சள், வெள்ளை-ரோஸ் கோல்டு சங்கிலி, சிறிய பெண்டன்ட்டுகள், முத்து மாலை அதற்கு பொருத்தமான ஸ்டட் அல்லது ட்ரோப்ஸ் போன்றவை ஏற்றது.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker